பழங்குடி மரபின் யுவசக்தி!

பரதநாட்டியம் கற்றுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. நேரம் வேண்டும். செலவழிக்கப் பணம் வேண்டும்.
பழங்குடி மரபின் யுவசக்தி!

பரதநாட்டியம் கற்றுக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. நேரம் வேண்டும். செலவழிக்கப் பணம் வேண்டும். நினைவாற்றல் வேண்டும். ஆனால் பதினொரு வயது யுவசக்தி ப்ரியாவுக்கு பரத நாட்டியம்  கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.  ஆறாவது வயதில், இரண்டாவது படிக்கும்போது பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.  இப்போது யுவசக்தி படிப்பது செயின்ட் ஜோசப் பள்ளியில், ஆறாவது வகுப்பில்.

யுவசக்தி ப்ரியா குறித்து அவரது பாட்டனார் ராஜேந்திரன் கூறுகையில்:
"அவருக்கு டிவியில் டான்ஸ் பார்க்கும்போதே அதைப்பார்த்து ஆடுகிற ஆர்வம் இருந்தது.  அதனால் அவள்,  "பரத நாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும்''  என்று சொன்ன போது, வெட்டுவாங்கேணியில் வசிக்கும் நாங்கள் அவளைக் கூட்டிக் கொண்டு, நாவலூர், காரப்பாக்கம், படூர் என்று அவள் குரு, "கலாலயா'  யாழினி கற்றுக் கொடுக்கும்  இடத்துக்கெல்லாம்  போவோம்.  அவள் ஒரு நடன வகுப்புக் கூடத் தவறியதில்லை.  பள்ளிக் கூடத்திலும் படிப்பில் கெட்டிக்காரி. ஒரு நாள் கூட பள்ளிக் கூடத்துக்கு லீவு போட்டதில்லை.

சில நாட்களில் மாலை ஏழு மணிக்கு நடன வகுப்பு ஆரம்பித்தால், பத்து - பத்தரை வரை ஆகும் முடிக்க.  ஆனாலும்  மறுநாள் யுவசக்தி வகுப்புக்குப் போகாமல் இருந்ததில்லை.  சென்ற வாரம்  பாரதிய வித்யா பவனில் யுவசக்தியின்  "சலங்கை பூஜை' நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினர்களாக சொர்ணமால்யா கணேஷ், டாக்டர் சுமதி, குரு "கலாஷேத்ரா' தாமஸ், வசுந்தரா தாமஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் பரதநாட்டியம் கற்றுக்கொள்வது சாதாரணமான நிகழ்வுதான்.  அப்படியிருக்க,  யுவசக்தி ப்ரியாவின் நடனத்தில்  சிறப்பு என்னவென்றால்,   நாங்கள் கணிக்கர் எனப்படும் பழங்குடி மரபைச் சேர்ந்தவர்கள். குடுகுடுப்பைக்காரர் தொழில் செய்பவர்கள். எங்கள் இனத்தில் பரத நாட்டியம் கற்றுக் கொள்ளும் முதல் பெண் யுவசக்திதான்.  வருங்காலத்தில் யுவசக்திக்கு ஐ.ஏ.எஸ். படித்து சாதனை  செய்ய வேண்டும் என்பதே  ஆசை '' என்கிறார் ராஜேந்திரன்.
 - சித்தார்த்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com