டிப்ஸ் கார்னர்

பஜ்ஜி மாவில் பொடியாக நறுக்கிய புதினா, ஓமவல்லி இலை அல்லது வெற்றிலை சேர்க்கலாம் - நல்ல வாசனையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.
டிப்ஸ் கார்னர்
  • பஜ்ஜி மாவில் பொடியாக நறுக்கிய புதினா, ஓமவல்லி இலை அல்லது வெற்றிலை சேர்க்கலாம் - நல்ல வாசனையாக இருப்பதுடன் எளிதில் ஜீரணமாகும்.
  • புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால். இரவில் நல்ல உறக்கம் வரும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • இருமல், கபம் முதலியவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • பாதுஷா செய்யும் போது மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து, சிறிதளவு வனஸ்பதியையும், நெய்யும் சேர்த்தால் பாதுஷா மிருதுவாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும்.
  • ஓட்டல் பூரி போல் உப்பலாக பூரி வேண்டுமா? கோதுமை மாவைப் பிசையும் போதே ஒரு தேக்கரண்டி சோயாமாவு, அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் போதும். பூர் உப்பலாக வரும். இது சீக்கிரத்தில் நமர்த்தும் போகாது.
  • வேக வைத்த உருளைக் கிழங்குடன் அரிசிமாவு, கடலை மாவு சேர்த்து ஓமப் பொடி பிழிந்தால் பிரமாதமான சுவையுடன் ஓமப்பொடி இருக்கும்.
  • நாலு டம்ளர் கோதுமை மாவுக்கு அரை டம்பளர் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து கோதுமையுடன் கலந்து உப்பு போட்டு கரைத்து தோசை வார்த்தால் தோசை மிருதுவாக இருக்கும்.
  • பாதாம் அல்வா கிளறும் போது ஊறிய பாதாம் பருப்புடன் குங்குமப் பூவையும் போட்டு அரைத்தால் நிறமும் மணமும் தூக்கலாக இருக்கும்.
  • வெண்பொங்கல் செய்து பக்குவம் ஆனதும் குக்கரை திறந்து காய்ச்சிய பாலில் ஒரு கரண்டி விட்டுக் கிளறி மூடினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
  • இட்லி மிளகாய் பொடியில் எண்ணெய் ஊற்றிக்கொள்வதற்குப் பதிலாக தயிர் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ருசியாகவும் இருக்கும். உடம்புக்கும் நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com