டிப்ஸ் கார்னர் 

சாம்பார் சமைக்கும்போது சில நேரங்களில் சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிடும். என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறீர்களா? உடனடியாக 2 கரண்டி கடலைமாவு,
டிப்ஸ் கார்னர் 

சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால்
சாம்பார் சமைக்கும்போது சில நேரங்களில் சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிடும். என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறீர்களா? உடனடியாக 2 கரண்டி கடலைமாவு, 1 கரண்டி அரிசிமாவு என இரண்டையும் சிறிது தண்ணீர்விட்டு கரைத்து சாம்பாரில் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால் சாம்பார் கெட்டியாகி சூப்பராக இருக்கும். இது ஒரு வழி. இன்னொரு வழி சாம்பாரில் சில சமயம் பருப்பு சேராமல் நீர்க்க இருக்கும். அப்போது துவரம் பருப்பு சிறிது எடுத்து வறுத்து மக்சியில் அரைத்து சாம்பாரில் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். சம்பார் கெட்டியாகிவிடும்.
சாம்பாரில் புளிப்பு அதிகமானால்
ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சுவைக்கு தகுந்தது போன்று பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிதளவு எண்ணெய்விட்டு வதக்கி சாம்பாரில் ஊற்றினால் சுவையாக இருக்கும். புளிப்பான சாம்பாரில் சிறிய உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகிவிடும்.
சாம்பார் பொடி டிப்ஸ்
சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்தால் அதில் பூச்சி வராது. மறக்காமல் சாம்பார் செய்யும்போது உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். சாம்பார் பொடி அரைத்துக் கொள்ளும்போது ஒரு கிண்ணம் புழுங்கல் அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியைக் கொண்டு சாம்பார் செய்யும்போது ஓட்டால் சாம்பார் போன்று குழைவாக கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.
சாம்பார் வைக்கும் முன் சில டிப்ஸ்
துவரம் பருப்பை மிக்சியில் கரகரப்பாக அரைத்துக் கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வேகும். அரைகிலோ புளியை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கெட்டியான பேஸ்ட்டை டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் தேவைப்படும்போது புளியை பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் கரைப்பதினை இதன் மூலம் தடுக்கலாம். நேரமும் மிச்சம் ஆகும்.

* சாம்பாருக்கு காய்கறி, பருப்பு வகைகளை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்காமல் அளவான தண்ணீரில் வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். தண்ணீர் அதிகமாகி விட்டால் தான் நீண்ட நேரம் கேஸ் வீணாகும்.

* சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகி விட்டால் நல்லெண்ணெய்யை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங்கள். காரம் குறைந்து விடும்.

* சாம்பார் வைக்க பருப்பு குறைவாக இருந்தால் கவலை வேண்டாம். பருப்பு சாம்பாருக்கு பதிலாக கையில் உள்ள எந்த காய்கறிகளானாலும் அதில் சேர்த்து சாம்பார் வைத்தால் சுவையான காய்கறிகளுடன் கூடிய சாம்பார் தயார். 
- சி. ஜெயலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com