தனிமைத் தாயாக குழந்தையை வளர்ப்பது சுலபமல்ல! 

தனிமைத் தாயாக குழந்தையை வளர்ப்பது சுலபமல்ல! 

"பெண்களுக்கு மனோ தைரியமும் சக்தியும் தேவை. நான் எப்படி தனிமை தாயாக ( சிங்கிள் மதர்) என்னுடைய மகள் மசாபா குப்தாவை வளர்த்தேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்''

"பெண்களுக்கு மனோ தைரியமும் சக்தியும் தேவை. நான் எப்படி தனிமை தாயாக ( சிங்கிள் மதர்) என்னுடைய மகள் மசாபா குப்தாவை வளர்த்தேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறும் நடிகையும் மாடலுமான நீனா குப்தா, தன் அனுபவங்களை சொல்கிறார்:
 "என்னைப் பொருத்தவரை நான் ஒரு சக்தி வாய்ந்த பெண் என்று அடிக்கடி நானே சொல்லிக் கொள்வதுண்டு. இது என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவு காரணமாகவும் இருக்கலாம். ஆனால் அப்படி பகிர்ந்து பார்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. வாழ்க்கை முழுவதும் நான் ஒரு சாதாரண பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன். இது கடவுள் விருப்பமாகும்.
 என்னுடைய அம்மா என்னை வளர்த்து, படிக்க வைத்து நான் எடுத்த முடிவுகளுக்கெல்லாம் பக்கபலமாக நின்றது என் அதிர்ஷ்டமென்றே நினைக்கிறேன். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெற்றோர் ஆதரவு இருப்பது உதவியாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் சக்தி வாய்ந்தவள் என்பதில் சந்தேகம் இல்லை. கூடவே ஏதாவது ஒரு வகையில் மற்றவர் ஆதரவு கிடைப்பது அவளை மேலும் வலுபடுத்தும், வளப்படுத்தும்.
 பெரும்பாலும் பெண்கள் தனிமைத்தாயாகவும், திருமணமாகாமலேயே தாயாகவும் இருப்பதை பார்க்கிறேன். என்னைப் பொருத்தவரை மேற்கிந்திய கிரிகிகெட் வீரர் சர் விவியன் ரிச்சர்டுடன் தொடர்பு கொண்டதுதான் மேலும் என்னை பிரபலமாக்கியது என்று சொல்லலாம். எதையும் நான் வெளிப்படையாக சொல்ல விரும்புபவள். அந்தக் காரணத்தாலேயே நான் விவியன் ரிச்சர்டுடனான தொடர்பை வெளிப்படையாகச் சொல்ல முடிந்தது. இதனால் இருவேறு, விமர்சனங்கள் என் மீது பாய்ந்தன.
 தனிமைத்தாயாக ஒரு குழந்தையை வளர்ப்பது சுலபமல்ல. இந்த சமூகத்திற்கு எதிராக எடுத்த முடிவு அளவுக்கு மீறிய பிரச்னைகளை சந்திக்க வைத்ததோடு, மசாபாவை வளர்ப்பதிலும் சிரமமாக இருந்தது. நல்ல வேளையாக என்னைக் காப்பாற்றிக் கொள்ள போதிய வருமானம் இருந்தது. வருமானம் இல்லாத பெண்கள் ஆதரவும் இல்லாமல் எப்படி சிரமப்படுகிறார்கள் என்பது குறித்து நான் கவலைப்படுவதுண்டு. வசதிகள் இருந்தாலும் நம்முடைய சமூகமோ அல்லது எந்த ஒரு நாடாக இருந்தாலும் சரி ஏழைப் பெண்களை எப்படியெல்லாம் கொடுமை படுத்துகிறார்கள். எத்தனை இடையூறுகளை ஏற்க வேண்டியிருக்கிறது என்பதை நினைக்கும்போது நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள் தோன்றும்.
 பெண்களுக்கு இயற்கையிலேயே சக்தியிருந்தாலும் கணவனின் கொடுமைகளை தாங்குவதற்கும் ஒரு வரம்பு இருக்குமல்லவா? வேலைக்கு செல்லாத பெண்களாக இருந்தால் கொடுமைகள் இன்னும் அதிகமாகலாம். என்னைப் பொருத்தவரை என் குடும்பமும், நண்பர்களும் எனக்கு உதவியாக இருந்ததோடு, வருமானமும் எனக்கிருந்தால் அதுவே என்னை ஒரு சக்தி வாய்ந்தவளாக மாற்றியது. பல பெண்களுக்கு இதுபோன்ற ஆதரவோ வாய்ப்போ கிடைப்பதில்லை என்பதும் உண்மை.
 தனிப்பட்டமுறையில் என்னைக் கேட்டால், நான் எடுத்த முடிவு போன்று பெண்கள் "தனிமைத் தாயாக' வாழ முடியுமென்ற எடுக்காதீர்கள் என்றே சொல்வேன். காரணம்? நான் என் வாழ்க்கையில் முடிவெடுத்த காலத்தில் இருந்த சமூகம் இன்றளவும் மாறவில்லை. சூழ்நிலைகளிலும் மாற்றமில்லை. இந்த உண்மையை மறைக்க நான் விரும்பவில்லை. தனிமை தாய் ஒருத்தி குழந்தையை யாருடைய ஆதரவும் இன்றி வளர்ப்பது சாத்தியமல்ல. நிறையவே பிரச்னைகள் உள்ளன.
 மசாபாவை பற்றியோ, நான் எடுத்த முடிவு குறித்தோ நான் வருத்தப்பட்டதில்லை. இப்போது கடின உழைப்பின் மூலம் மசாபாவுக்கு கிடைக்கும் வெற்றிகள் என்னை பெருமைப்பட வைத்துள்ளது. பல வகையில் ம சாபா பிரச்னைகளை எதிர் கொள்ளும்போது, நான் கூட இந்த அளவுக்கு போராடியதில்லை என்று நினைக்க தோன்றுகிறது.
 பெண்கள் எதற்காகவும் மனதை தளர விடுவதோ, கண்ணீர் விடுவதோ கூடாது. சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதோடு எதிர்ப்புகளை சமாளிக்கும் சக்தியை பெற வேண்டும். ஏதாவது ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இதை நான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டபோது, பலர் என்னை பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. இதற்காக நான் மசாபாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்'' என்கிறார் நீனா குப்தா.
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com