சமையல் டிப்ஸ்

முட்டையை வேக வைக்கும் போது  தண்ணீரில் ஒரு  தேக்கரண்டி  வினிகரை  விட்டால்,  முட்டையின் ஓடு வெடித்தாலும்  உள்ளே இருப்பவை வெளியில் வராது.    
சமையல் டிப்ஸ்


* முட்டையை வேக வைக்கும் போது  தண்ணீரில் ஒரு  தேக்கரண்டி  வினிகரை  விட்டால்,  முட்டையின் ஓடு வெடித்தாலும்  உள்ளே இருப்பவை வெளியில் வராது.    
* பால் புளிக்காமல் இருக்க,  பாலைக் காய்ச்சும்போது, ஒரு ஏலக்காயைச்  சேர்த்துக் காய்ச்சினால், நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். 
* தோல் உரித்த உருளைக்கிழங்குகள் கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரைத் தெளித்து ஃப்ரிட்ஜில்  வைக்கவும்.
* சமையல் மேடையில் படிந்திருக்கும்,  எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைத்துப்  பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
* கத்தரிக்காய்  விரைவில் வாடி வதங்கி விடாமல் இருக்க கத்தரிக்காயை ஹாட்  பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
* வடை, போண்டா பொரித்த எண்ணெய்ப் பின்னர்,  காறலாக இருக்கும்.  இதை போக்குவதற்கு  எண்ணெய்யில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்துவிடவும்.  இப்படி செய்தால் எண்ணெயின் காறல் குறைந்துவிடும்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com