சமையல் டிப்ஸ்....

கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசி அதிகமாக இருப்பதுடன் உடலுக்கு வலிமையும் ஆகும்.
சமையல் டிப்ஸ்....

• கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசி அதிகமாக இருப்பதுடன் உடலுக்கு வலிமையும் ஆகும்.

• சாப்பிட முடியாத அளவுக்கு வாழைப்பழங்கள் கொழகொழவென்று கனிந்திருக்கிறதா? தோலை உரித்து பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சாப்பாத்திகளோ, இனிப்பு பூரிகளோ தயார் செய்யலாம்.

• ஒரு கப் பச்சரிசிக்கு அரை கப் உளுந்து சேர்த்து சுடுநீரில் ஊற வைக்கவும். பின்னர், அதை நைஸ் மாவாக அரைத்து இட்லி செய்து பாருங்கள். சாஃப்ட்டாகவும், ருசியாகவும் இருக்கும்.

• கடலைப்பருப்பு, தனியா தலா ஒரு தேக்கரண்டி, நான்கு காய்ந்த மிளகாய் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிசெய்து கொள்ளவும். இந்தப் பொடியை சேவை, இடியாப்பம் செய்யும்போது அதன் மீது தூவி பின்னர் உப்பு, தாளித்த கறிவேப்பிலை கலந்து பரிமாறலாம். சுவையாக இருக்கும்.

• கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

• எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் பாத்திரத்தில் ஒரு கரண்டி மோர்விட்டுக் கலக்கிய பிறகு தேய்த்தால் பிசுக்கு நொடியில் போய்விடும்.

• பாலை புரை ஊற்றி வைக்கும் போது அதில் கொஞ்சம் அரிசிக் கஞ்சியைக் கலந்து ஊற்றி வைத்தால் தயிர் கட்டியாக வரும்.

• வடை மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் ஒரு மேஜைக் கரண்டி நெய் சேர்த்துவிடுங்கள். மாவு இறுகிவிடும்.

• ரவை உப்புமா அதிகமாக மீந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைச் சேர்த்து பிசைந்து வடை போன்று பொரித்தெடுத்துவிடுங்கள். சுவையாக இருக்கும்.

• எந்தவிதப் பாயசமாக இருந்தாலும் அதில் ஒரு மேஜைக்கரண்டி வெந்த பயத்தம் பருப்பைச் சேர்த்துவிட்டால் பாயசத்தின் சுவை பிரமாதமாக இருக்கும். 
- சி.ஆர்.ஹரிஹரன், ஆர்.ஜெயலட்சுமி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com