மலாலாவைப் பற்றிய திரைப்படம்!

தம்மீது தாலிபன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போதும் அதற்கெல்லாம் துளியும் அஞ்சாது பெண் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருபவர்
மலாலாவைப் பற்றிய திரைப்படம்!

தம்மீது தாலிபன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போதும் அதற்கெல்லாம் துளியும் அஞ்சாது பெண் கல்விக்காகத் தொடர்ந்து போராடி வருபவர் உலகப் புகழ்பெற்ற மலாலா. இதற்காக மிகக் குறைந்த வயதிலேயே நோபல் பரிசு பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் மலாலாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ஹாலிவுட் திரைப்படம் இவ்வாண்டு இறுதியில் திரையிடப்பட இருக்கிறது. படத்தின் பெயர் "குல்மக்காய்'. 11 -ஆவது வயதில் தமது வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை விளக்கி குல்மக்காய் என்னும் புனை பெயரில் லண்டன் பிபிசி செய்தி நிறுவனத்தின் உருது பிளாக்கில் எழுதியிருந்தார். அதன் விரிவாக்கம்தான் இந்தப் படம்.
 உலக அளவில் வெளியிடப்படுகிற இந்தப் படத்தின் முதல்நாள் வசூல் முழுவதும் பெண் கல்விக்கான பிரசாரத்திற்கான நிதிக்கு வழங்கப்படும் என்று இயக்குநர் அம்ஜத்கான் அறிவித்துள்ளார்.
 இந்தித் தொலைக்காட்சித் தொடரில் நடித்துப் பாராட்டுப் பெற்ற குழந்தை நட்சத்திரம் ரீமா ஸமீர் ஷேக்கும், மலாலாவின் அம்மாவாக பாலிவுட் நடிகை திவ்யா தத்தும் நடித்துள்ளனர்.
 நடிகர் ஓம் பூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு பாட்டும் பாடியிருக்கிறார். இந்தப் படத்தில் சில சண்டை காட்சிகள் குஜராத்தில் பஜில் என்னும் இடத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. 1200 நடிகர்கள் பங்கேற்ற காட்சிகளை, இயக்குநர் 16 கேமராக்கள் மூலம் பதிவு செய்திருக்கிறார். படத்தின் இறுதிக் காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட இருக்கின்றன. இந்தப் படத்தை முடிப்பதற்கு 3 ஆண்டுகள் ஆகியுள்ளன.
 - தங்க சங்கரபாண்டியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com