இது புதுசு: விளையாட்டுத்துறையில் ஆண், பெண் பேதமில்லை!

""விளையாட்டுத் துறையில் ஆண்-பெண் பாகுபாடு இருப்பதாக நான் கருதவில்லை.
இது புதுசு: விளையாட்டுத்துறையில் ஆண், பெண் பேதமில்லை!


""விளையாட்டுத் துறையில் ஆண்-பெண் பாகுபாடு இருப்பதாக நான் கருதவில்லை. விளையாட்டு என்பது அனைவருக்குமே   பொதுவானது. இதில் எந்த பிரிவினையும் இல்லை. ஆண்-பெண் என்ற வித்தியாசம் இருக்கலாமே தவிர, அனைவரையும் ஒருங்கிணைக்க உங்களால் முடியாது. நீண்ட காலமாகவே  கிரிக்கெட்  ஆண்களுக்குரிய விளையாட்டாகவே கருதபட்டது. இன்று பெண்கள் கிரிக்கெட்டைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். நான் இதை உண்மையான மாறுதலாக நினைக்கிறேன். மக்கள் மனதில் விளையாட்டில் மட்டுமல்ல மற்ற விஷயங்களிலும் முன்னேற்றத்தையும், மாறுதலையும் காண முடிகிறது'' என்று கூறுகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவர் மித்தாலிராஜ்.

எனக்கு ஆதரவளிக்கும் என் மகன்!

தனக்கேற்பட்டுள்ள  புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சோனாலி பிந்த்ரே, தற்போது, "" எனக்கு நம்பிக்கையும் ஆதரளம் அளிப்பது என் மகன் ரன்வீர்தான். நானும் என் கணவரும் எங்கள் மகனிடம் எப்போதும் வெளிப்படையாக பழகுவோம். எனக்கேற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பை அவனிடம் சொல்ல மிகளம் சங்கடப்பட்டோம்.  ஆனால் ரன்வீர் முதிர்ந்த மனநிலையோடு இதை ஏற்றுக் கொண்டதோடு எனக்கு நம்பிக்கையையும், வலிமையையும் கொடுக்கும் வகையில் ஆதரவாக இருக்கிறான்'' என்று சோனாலி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

டிவி தொடரில்  ஜெயப்ரதா!

கடைசியாக  "ஆத்மஜா' என்ற பெங்காலி படத்தில் நடித்த முன்னாள் நடிகை ஜெயப்ரதா, தற்போது  "பர்பெக்ட் பதி' என்ற டிவி தொடரில் நடிகை பிரமிளா ரத்தோடின் அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  ""என்னுடைய  நீண்ட கால அனுபவத்தில் எப்போதும் அர்த்தமுள்ள பாத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து நடித்தேன்.  டிவி தொடரின் கதையை கேட்டபோது நல்ல பாத்திரமாக தோன்றியதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஏற்கெனவே தெலுங்கில்  "ஜெயப்பிரதம்'   என்ற ரியாலிடி ஷோவில் பங்கேற்ற அனுபவம் இருப்பதால், இந்த  டிவி தொடரில் நடிப்பது சிரமமாக இருக்காது'' என்று கூறியுள்ளார்.

மெழுகு சிலை மியூசியத்தில் தீபிகா படுகோன் சிலை!

பிரபல டென்னீஸ் வீரர் பிரகாஷ் படுகோனின் மகளான  தீபிகா படுகோன், "ஓம் சாந்தி ஓம்'  என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் பிரவேசித்து இன்று அதிக சம்பளம் பெறும் நடிகையாக விளங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லண்டனில் உள்ள மேடம் டு சாட்டின் மெழுகுச்சிலை மியூசியத்தில் இவரது சிலையும்  இடம் பெறப்போகிறது.  தொடர்ந்து சில மாதங்களில் டெல்லியிலும் அவரது சிலையை அமைக்க  ஏற்பாடுகள் நடக்கின்றன.  இதற்காக தீபிகாவை  லண்டனில் உள்ள மேடம் டு சாட் ஸ்டூடியோ கலைஞர்கள் சிலையை  தத்ரூபமாக அமைய வேண்டுமென்பதற்காக 200க்கும்  மேற்பட்ட  உடல் அளளகளையும், புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

இந்திய திரைப்படவிழாவில் சிமி கேரவல்!

இந்திய படங்களில் காலஞ்சென்ற பாலிளட் நடிகர் சசிகபூரின் பங்களிப்பை களரவிக்கும் வகையில், மெல்போர்னில் நடைபெறளள்ள இந்திய திரைப்பட விழாவில், 1972-இல் வெளியான  சசிகபூர் - சிமிகேரவல்  நடித்த  "சித்தார்த்தா' படம் இடம் பெறுகிறது. இதுகுறித்து சிமிகேரவல் கூறுகையில், ""இந்திய திரைப்பட விழாவில் நானும், சசிகபூரும் நடித்த "சித்தார்த்தா' படம் திரையிடப்படுவதால் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். சசிகபூர் சிறந்த நடிகர், மனிதர் மட்டுமல்ல என் நண்பரும் கூட. யாரும் தன்னைப் பற்றி கேள்விகள் கேட்காதபடி  பேசுவார், பழகுவார். தான் எடுக்கும் படங்கள் வியாபார ரீதியாக  ஒடாது என்று  தெரிந்தும், சொந்த படங்கள் எடுத்தவர். அவரை களரவிக்கும் விழாவில் பங்கேற்பது பெருமையாக உள்ளது'' என்றார்.

சல்மான் படத்திலிருந்து விலகல்!

அமெரிக்காவின் டிவி ஷோவான "க்வாண்டிகோ' வின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா (36) மீண்டும் மும்பை திரும்பியுள்ளார். ஏற்கெனவே இவர் நடித்துள்ள  "எ கிட் லைக் ஜாக்' மற்றும் "இஸ் நாட் இட் ரொமான்டிக்' ஆகிய இரு ஆலிளட் படங்கள் திரையிடும் நிலையில் உள்ளன. இந்நிலையில்  சல்மான்கானின் "பாரத்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட  பிரியங்கா,  திடீரென அப்படத்திலிருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா பாடகர்  நிக்ஜோன்ஸ் (25) என்பவரை பிரியங்கா காதலித்து  வந்ததாக கூறப்பட்ட  நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதே பிரியங்கா விலகலுக்கு காரணமென்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com