பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான சட்டம்!

தென் கொரியாவில் பெண்கள் வன்கொடுமைகளினால் பாதிக்கப்பட்டால், சட்டங்கள் அவரை காப்பாற்றுவதில்லை. ஒரு பெண், தன்னை ஒருவர் பலாத்காரம் செய்து விட்டதாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான சட்டம்!

தென் கொரியாவில் பெண்கள் வன்கொடுமைகளினால் பாதிக்கப்பட்டால், சட்டங்கள் அவரை காப்பாற்றுவதில்லை. ஒரு பெண், தன்னை ஒருவர் பலாத்காரம் செய்து விட்டதாக உள்ளூர் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? 
பலாத்காரம் செய்தவர் அந்தப் பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவளால் தான் பல கஷ்டங்களை அனுபவித்த தாகவும், கட்டாயப்படுத்தி காரியம் சாதித்துக் கொண்டாள் எனவும் எதிர்புகார் கொடுக்க, காவல்துறையோ, யாரை ஆதரிப்பது? யாரை கேள்விகேட்பது? என தினறும். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை மேலும் பாதிக்கப்படுகிறது. 
இந்நிலையில், சமீபத்தில் சியோ-ஹை-ஜின் எனும் பெண்மணி, தன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கியவருக்கு எதிராக நான்கு ஆண்டுகளாக கடுமையாகப் போராடி தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அத்துடன் நின்று விடாமல் ‘THE WITCH' என்ற இயக்கத்தை தொடங்கி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி வருகிறார். மேலும், அவர்களுக்காக போராடி, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தருகிறார். இதனால் கொரிய அரசாங்க கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பெண் தான் பாதிக்கப்பட்டவள் என நிரூபித்திருந்தால், அந்த வழக்கு முடியும் வரை கொடுமையிழத்தவர் அந்தப் பெண் பற்றி எந்த குற்றச்சாட்டை கூறினாலும் அதனை விசாரிக்கக்கூடாது என அரசு கடும் சட்டத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
-ராஜேஸ்வரி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com