இந்திய ஜெர்ஸிதான் மிகப்பெரிய கௌரவம்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி.
இந்திய ஜெர்ஸிதான் மிகப்பெரிய கௌரவம்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி. இந்த உயரத்தை எட்டிய முதல் பெண் கிரிக்கெட் பந்து வீச்சாளர் இவர்தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை ஜூலான் கோஸ்வாமி எட்டிப் பிடித்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகவும் சாதனையாகவும் கருதப்படுகிறது.
 மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஜூலான் கால்பந்து ரசிகராகத்தான் வளர்ந்தார். 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியை நேரில் ஸ்டேடியத்தில் பார்த்த அனுபவம் , இரண்டும் தான் அவரை கிரிக்கெட்டை நோக்கி உந்தித் தள்ளியது.
 2002-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் 35 வயதான ஜூலான், இதுவரை 236 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 290 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 இந்த சாதனை குறித்து அவர் கூறுகையில்,"நான் அதிக அளவில் பயிற்சியை மேற்கொள்வேன். நான் இதுவரை எடுத்த 200 விக்கெட்டுகளையும் முக்கியமானதாகவே கருதுகிறேன். நான் எடுத்த ஒவ்வொரு விக்கெட்டையும் நினைவு வைத்துள்ளேன்.
 ஒரு வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களையும் காயங்களையும் கடந்து வந்துள்ளேன். ஆனால் நான் என் பயிற்சியையே மிகவும் நம்புகிறேன். எப்போது மைதானத்தில் விளையாடினாலும் என் 100 சதவீத உழைப்பையும் கொடுக்க நினைப்பேன். என் அணிக்காகவே விளையாடுவேன், தனிப்பட்ட எனது வெற்றிகள், சாதனைகளுக்காக விளையாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை.
 ஒவ்வொரு போட்டியையும் மிகவும் ரசித்து விளையாடுகிறேன். என்னைப் பொருத்தவரை இந்திய அணிக்கான ஜெர்ஸியை அணிவதையே மிகவும் கெüரவமாகக் கருதுகிறேன். அதை மிஞ்சிய ஒரு விருதோ, கெüரவமோ இல்லை'' என்று பெருமிதம் மிளிரக் கூறுகிறார் ஜூலானா கோஸ்வாமி.
 ஜூலானா பெண்கள் கிரிக்கெட்டுக்கான ஐசிசியின் விருதை 2007-ஆம் ஆண்டு பெற்றார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றார். 2010-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2012-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
 - ஃப்ரீடா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com