டிப்ஸ்... டிப்ஸ்...எலுமிச்சை மகத்துவம்

தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம்.
டிப்ஸ்... டிப்ஸ்...எலுமிச்சை மகத்துவம்

• தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம்.

• எலுமிச்சம் பழத்தோலை காய வைத்து பொடி செய்து கடலைமாவு, தயிர் சேர்த்து ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தலாம்.

• ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன் சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் வட்டவட்டமாக தடவி 15 நிமிஷம் ஊறவிட்டு கழுவினால், பெண்களின் முகத்திலுள்ள பூனை முடிகள் நிரந்தரமாக அகலும்.

• தோலுக்கு உற்ற தோழன் என்பதால் அடிக்கடி எலுமிச்சைச் சாறு பருக, சருமம் பளபளப்பாகும்.

• தலைக்கு ஷாம்பு உபயோகித்த பிறகு சிறிது தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தலைமுடியைக் கழுவினால் முடி மேலும் பளபளப்பாகக் 
காட்சியளிக்கும்.

• வாரத்துக்கு ஒருமுறை எலுமிச்சம் பழச்சாறில் பற்களை சுத்தம் செய்தால் பற்கள் முத்துப்போல பிரகாசிக்கும்.

• அடிக்கடி சளி, குமட்டல், வாந்தி என அவதிப்படுபவர்கள் இளம் சூடான நீரில் எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

• குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாறை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால், அப்போது பறித்தது போல ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

• காலை வேளையில் தேநீரில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அருந்தினால் உடல் எடை குறையும்.

• தேன், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் கலவை சருமத்தை ஈரப்பதத்தோடு 
வைத்திருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com