டீம் மோடியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சந்திரகலா. இவர் உத்தரப்பிரதேசத்தில் துணை ஆட்சியர்
டீம் மோடியில் பெண் ஐஏஎஸ் அதிகாரி!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சந்திரகலா. இவர் உத்தரப்பிரதேசத்தில் துணை ஆட்சியர், ஆட்சியர் என அவர் ஏற்ற பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டு மக்களின் பாராட்டுகளைப் பெற்றவர். உத்தரப்பிரதேச மாநிலம் பிஜனுர் மற்றும் மீரட் மாட்டத்தைச் சேர்ந்த தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தின் மூலம் அந்த இரு மாவட்டங்களையும் 100 சதவீதம் புறவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக மாற்றிய பங்களிப்புக்காக இவர் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியிடம் விருது பெற்றுள்ளார். இந்நிலையில் "டீம் மோடி' (பங்ஹம் ஙர்க்ண்) என அழைக்கப்படும் குழுவில் இவர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 2019-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் புறவெளி கழிப்பறைகளை ஒழிக்கும் "ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் செயலாளராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேதவல்லி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com