என் புகழுக்கு காரணம் என் தந்தை 

பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதி சுனில் தத் - நர்கீஸ் மகளான பிரியா தத், தன் அரசியல் பிரவேசத்துக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் காரணம் தன்னுடைய தந்தை சுனில் தத் என்று
என் புகழுக்கு காரணம் என் தந்தை 

பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதி சுனில் தத் - நர்கீஸ் மகளான பிரியா தத், தன் அரசியல் பிரவேசத்துக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் காரணம் தன்னுடைய தந்தை சுனில் தத் என்று கூறும் இவர், தன்னுடைய அனுபவங்களைக் கூறுகிறார்:
 "என்னுடைய 13-ஆவது வயதில் தாயை இழந்தேன். என் தாய் நர்கீஸ் காலமான பின் தந்தை சுனில் தத் தான் என்னைத் தாயைப் போல் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். அவரிடமிருந்துதான் அனைத்து விஷயங்களையும் கற்றேன். இன்று நான் நல்ல மகள், மனைவி, தாய் மற்றும் அரசியல்வாதி என பெயரெடுத்ததற்கு அவர்தான் காரணம்.
 நாங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாதென்று என் தந்தை நினைத்தார். எனக்கும் ஆர்வம் இல்லை. ஆனால் என் தந்தை அவரது தொகுதியில் பிரபலமாக விளங்கியதோடு, அவரிடமிருந்து மக்கள் பல தேவவைகளை எதிர்பார்த்ததால் நான் அவருக்கு உதவ அரசியலில் ஈடுபட்டேன். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
 பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம். ஆணைச் சார்ந்திருக்கும் பெண்களுக்கும் இங்கு முறையான பாதுகாப்பு இல்லை. அதனால் என் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறேன்.
 இதனால் என் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியலையும் சரிசமமாக நடத்திச் செல்வது தொடக்கத்தில் சிரமமாக இருந்தது. நான் அரசியலில் ஈடுபட்டபோது என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். அவர்களை நானே கவனிக்க வேண்டியிருந்ததால், என்னால் முடிந்த அளவு தொகுதியில் உதவிகளைச் செய்தேனே தவிர, அளவுக்கு மீறி வாக்குறுதிகள் அளித்ததில்லை.
 இயற்கையில் எனக்குள் இருந்த பிடிவாதமும் பொறுமையும் தான் என்னுடைய பலமென்று கருதுகிறேன்'' என்கிறார் பிரியா தத்.
 - பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com