ஒரு வரிச் சமையல்!

பருப்பு ரசத்துக்கு பருப்பை வேக வைக்க நேரமில்லாவிட்டால், ஒரு பிடி துவரம் பருப்பை நீரில் நனைய வைத்து அரைத்துச் சேர்க்கலாம். ஒரு துண்டு வெல்லம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
ஒரு வரிச் சமையல்!

* உளுந்தை அரை ஊறலில் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைத்து, அதில் பச்சைக் கடுகு சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து வைத்துக் கொண்டால், பொரித்த குழம்பு, கூட்டு, இவற்றுடன் எண்ணெயில் பொரித்து போட்டால் மணமும், சுவையும் அமோகமாக இருக்கும்.

* பருப்பு ரசத்துக்கு பருப்பை வேக வைக்க நேரமில்லாவிட்டால், ஒரு பிடி துவரம் பருப்பை நீரில் நனைய வைத்து அரைத்துச் சேர்க்கலாம். ஒரு துண்டு வெல்லம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

* காரக் குழம்பு, புளிக் குழம்பு, வத்தக் குழம்புக்கு வறுக்கும்போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வறுத்து குழம்பு வைத்தால் சுவை அபாரமாக இருக்கும், எண்ணெய் செலவு இருக்காது.

* அகத்திக்கீரையை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, அரிசி களைந்த நீரில் வேக வைத்து, கால் கிண்ணம் தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* கேழ்வரகை அரைத்துப் பால் எடுத்து அல்வா செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும்.

* நீர் மோரில் போட கறிவேப்பிலை இல்லாவிட்டால் எலுமிச்சை இலைகளைக் கிள்ளிப் போட்டு ஊற வைத்துச் சாப்பிடலாம்.

* ரவா தோசை மாவில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவைக் கலந்து வார்த்தால் கரகரப்பாக இருக்கும்.

* மோர்க்குழம்பில் வெண்டைக்காய், குடை மிளகாய், கத்தரிக்காய் போன்றவற்றை வதக்கிச் சேர்க்கும் போது சிறிது உப்பு சேர்த்தால் காய்களில் உப்பு ஏறி சுவையை அதிகரிக்கச் செய்யும்.

* ரவா கேசரியை வெல்லம் போட்டு செய்தால் தனி ருசியாக இருக்கும்.

* வெள்ளரிப் பிஞ்சை நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் தொட்டுச் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
- பி.கவிதா, பொ.பாலாஜி, 
வெ.அனகா, எம்.ஏ.நிவேதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com