சமையல் டிப்ஸ்

வாழைக்காய் சிப்ஸ் போடும்போது நேரடியாக சீவிப் போட்டால் ஒன்றோடொன்று ஒட்டாமல் வரும். 
சமையல் டிப்ஸ்

• வறுத்த மோர் மிளகாய் மீந்துவிட்டால் மிக்ஸியில் பொடி செய்து, நல்லெண்ணெய் ஊற்றினால், இட்லிக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
• இளசான பீர்க்கங்காயைப் பொடியாக நறுக்கி அதில் புளி, மிளகாய் சேர்த்து மை போல் அரைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்தால் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சைட் டிஷ் தயார்.
• வாழைக்காய் சிப்ஸ் போடும்போது நேரடியாக சீவிப் போட்டால் ஒன்றோடொன்று ஒட்டாமல் வரும்.
• வெண்டைக்காய் சாம்பார், புளிக்குழம்பு வைக்கும்போது வெண்டைக்காய் உடைந்து விடாமல் இருப்பதற்கு, அதை வதக்கும்போது சில துளிகள் எலுமிச்சம்சாறை ஊற்றினால் போதும்.
• எலுமிச்சை ஊறுகாய் நீண்ட நாள்கள் கெடாமலிருக்க சுக்கு, மிளகு, சீரகம், தனியா, ஓமம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து ஊறுகாயுடன் கலந்துவிட வேண்டும்.
• பலகாரங்களுக்கு மாவு பிசையும்போது தேங்காய் எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, மீண்டும் தேங்காய் எண்ணெயில் பொரித்தால், எண்ணெய் பொங்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com