முட்டைக்கோஸின் நன்மைகள் 

முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.
முட்டைக்கோஸின் நன்மைகள் 

• முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.
• பார்வைக் கோளாறுகளைப் போக்கும். பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்குச் சிறந்தது. 
• நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
• குடற்புண்ணால் அவதிப்படுவோர் முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். ஏனெனில் இதில் அல்சரைக் குணப்படுத்தும் குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
• முட்டைக்கோஸில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் கே சத்துகள் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அது தசைகளையும் நரம்புகளையும் வலுவாக்கும் தன்மை உடையது.
• முட்டைக்கோஸை பச்சையாகச் சாப்பிட்டால் அதனுடைய அனைத்து சத்துகளும் கிடைக்கும். எனவே, அதிகமாக வேக வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிடாமல் அரைவேக்காடாகவோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com