குளிர்காலத்தில் எடை கூடாமல் இருக்க!

குளிர்காலத்தில் பலருக்கு திடீரென எடை கூடும். இதற்கு முக்கியக் காரணம் குளிரினால் ஏற்படும் சோம்பேறித்தனம் தான்
குளிர்காலத்தில் எடை கூடாமல் இருக்க!

குளிர்காலத்தில் பலருக்கு திடீரென எடை கூடும். இதற்கு முக்கியக் காரணம் குளிரினால் ஏற்படும் சோம்பேறித்தனம் தான். வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை தள்ளிப் போடுவோம். மேலும் குளிருக்கு இதமாய் வறுத்த தின்பண்டங்களை நிறைய சாப்பிடுவோம். ஆகவே எடை கூடுவதைத் தவிர்க்க இயலாது. அதே சமயம் கீழ்கண்ட பழங்களைச் சாப்பிடுவதின் மூலம் எடை கூடுவதைத் தடுக்க முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழங்கள் தினமும் நம் கண்ணில்படுபவை தான்.

தக்காளி: ஒரு டம்ளர் தக்காளி சாறில் 24 சதவீதம் வைட்டமின் ஏ மற்றும் 34 சதவீதம் வைட்டமின் சி இருக்கிறது. இவைதான், நமது தினசரி உடல் இயக்கத்துக்கும் தேவை. இவற்றின் மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.

ஆரஞ்சு: இதில் வைட்டமின் சி சத்து அதிகம். ஆரஞ்சுக்கு தொற்றுகளுக்கு எதிராகப் போர் தொடுத்து வெற்றி பெறும் திறன் உண்டு. மேலும் உடலுக்கு தேவையான பொட்டாசியம், நார்ச்த்தினை வழங்கும்.

ஆப்பிள்: "ஆப்பிள் சேர்ப்பது டாக்டரை விரட்டும்' என்பது பழமொழி! ஆமாம் குளிர்காலத்தில் இந்த வார்த்தை மிகவும் உண்மை. ஆப்பிள் சாப்பிடுவதின் மூலம் சோம்பலையும் விரட்டி, உடல் புத்துணர்வு அடைந்து குளிரை விரட்டும்!

பேரிக்காய்: இது குளிர்காலத்தில் நமது உடலை கதகதப்பாக வைத்திருக்கும். "பியர்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காய், இந்த பேரிக்காய் வகையைச் சேர்ந்தது தான். இதை வாங்கி சாப்பிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com