உடலுக்கு நலம் தரும் இந்துப்பு...

தமிழ் மருத்துவத்தில் இந்துப்பு பற்றி அறிந்திருப்போம். இதற்கு "இமாலயன் உப்பு' என பெயர். ஆங்கிலத்தில் "ராக்சால்ட்' என கூறப்படுகிறது.
உடலுக்கு நலம் தரும் இந்துப்பு...

தமிழ் மருத்துவத்தில் இந்துப்பு பற்றி அறிந்திருப்போம். இதற்கு "இமாலயன் உப்பு' என பெயர். ஆங்கிலத்தில் "ராக்சால்ட்' என கூறப்படுகிறது. வழக்கமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கு சோடியம் குளோரைடு எனப் பெயர். ஆனால் பாறை உப்பு, நேர்மாறானது. மலைத்தொடர்களில் கருங்கல் பாறைகளில் சில லேசாக இருக்கும். அந்த பாறைகளிலிருந்துதான் இந்த உப்பு கிடைக்கிறது. இமாலயன் ராக் சால்ட் என்றழைக்கப்படும் இந்த உப்பு உடலுக்கு நன்மை தரக்கூடியது.
 இந்த உப்பு இமயமலைத்தொடரின் அருகில் உள்ள உப்பு மலைகளில் இருந்து பாறைகளாக வெட்டியெடுக்கப்படுகிறது. ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் பூமிக்கு அடியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்துப்பு என்றழைக்கப்படும் இவை பழுப்பாக மங்கலாக இருக்கும். கால்சியம், அயோடின், சல்பர் உள்ளிட்ட தாதுக்கள் இதில் உள்ளன.
 தமிழ் மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் ஆகிய வியாதிகளைத் தீர்க்கும். இதன் மருத்துவக் குணங்கள்: தினமும் உணவில் சேர்ப்பதால் எளிதில் செரிமானம், தைராய்டு பாதிப்பு, கண்களுக்கு குளிர்ச்சி தரும். குளிப்பதற்கு முன்னதாக உடலில் இந்துப்பை தேய்த்து வைத்து சிறிதுநேரம்கழித்து குளித்தால் உடல் அசதி தீரும்.இந்துப்புவை இளஞ்சூடான நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் துர்நாற்றம், பல்வலி, ஈறுவீக்கம், வயிற்றுப்புண் தீரும்.
 குறிப்பாக சர்க்கரை நோய்க்கு சிறந்தது. ஹார்மோன் கோளாறுகளை நீக்கும். உடலில் தேவையற்ற கழிவுகளை நீராக வெளியேற்றும். ரத்த அழுத்தம் வராது. நன்றாக தூக்கம் வரும். இயற்கையாகவே அனைத்து சத்துகளும் நிறைந்துள்ளதால் இந்துப்பை உணவில் சேர்த்து வர எந்த நோய்களும் வராது. சாதாரண உப்பை விட விலை அதிகம் என்றாலும் மருத்துவமனை செலவைக் குறைக்கலாமே..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com