கலக்குமா பெண்கள் ஹாக்கி அணி...?

இந்தியா ஏழு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. எதற்கு..? உலகப் பெண்கள் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் அணி போட்டியிட பங்கு பெறுவதற்கு!
கலக்குமா பெண்கள் ஹாக்கி அணி...?

இந்தியா ஏழு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. எதற்கு..? உலகப் பெண்கள் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் அணி போட்டியிட பங்கு பெறுவதற்கு!
 "லண்டன் நகரில் உலகப் பெண்கள் ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் இந்தியப் பெண்கள் அணி இங்கிலாந்து பெண்கள் அணியுடன் மோதும்.
 இங்கிலாந்து பெண்கள் அணிக்கு லண்டன்வாசிகளின் கரகோஷம் உற்சாகம் தரும். என்றாலும், இந்திய பெண்கள் அணிக்கு அது ஒரு குறையாக தடையாக அமையாது.
 2014 - ஆம் ஆண்டு , உலகப் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி ஆட தகுதி பெறவில்லை. 2014 - க்குப் பிறகு இந்திய பெண்கள் அணியில் பல மாற்றங்கள் முன்னேற்றங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்த ஆண்டின் துவக்கத்தில் காமன்வெல்த் போட்டிகளில் இங்கிலாந்து பெண்கள் ஹாக்கி அணியை இந்திய பெண்கள் அணி வென்றது.
 உலக அரங்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு பத்தாவது இடம். உலகப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா , அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளின் அணி ஒரு குழுவில் உள்ளன.
 இங்கிலாந்து அணியை தோற்கடித்தது நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த திருப்தியில் மெத்தனமாக இருந்துவிட முடியாது. முடிந்த ஆட்டத்தில் இந்திய அணி என்னென்ன தவறுகளை செய்தது என்று அலச வேண்டும். ஆட்டத்தின் கடைசி பதினைந்து நிமிடங்களில் செய்த பல தவறுகளை இனம் கண்டு கொண்டோம். நிச்சயமாக திருத்திக் கொள்வோம்.
 ஆட்டக்காரர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எப்படியாவது கால் இறுதி போட்டியில் பங்கு பெற வேண்டும்'' என்கிறார் சவிதா புனியா. இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் துணைத் தலைவி..
 "விளையாட உடலைத் தயார் நிலையில் வைத்திருப்பது, வேகமாக ஹாக்கி பந்தை கொண்டு செல்வது .. இந்த இரண்டும் இந்திய அணிக்கு நெருடலாக அமைந்திருக்கும் விஷயங்கள்.
 இந்த விஷயங்களில் இந்திய அணி கவனத்தைச் செலுத்தியிருக்கிறது. மூலையிலிருந்து பந்தை அடித்துத் தள்ளுவதில் இந்திய அணிக்கு பலம் குறைவாக இருந்தது. மூலையிலிருந்து தாக்குதல் நடத்துவதில் திறமையுள்ள குர்ஜித் கவுர் இந்திய அணியில் வந்திருப்பதால், நிச்சயம் பதிலடி கொடுக்க இந்திய அணி ஆயத்தம் உள்ளதாக மாறியுள்ளது.
 நாங்கள் திறமை காட்டி விளையாடி வந்திருக்கிறோம். நன்றாக விளையாடினால்தான் நாங்கள் திறமைசாலிகள் என்பது இந்திய மக்களுக்குப் புரியும்.
 எங்களது தாக்கும் அணி பலமாக உள்ளது. இந்திய அணியில் பங்கு பெறும் பதினெட்டு பேரில் பெரும்பாலானவர்கள் முதலாவதாக உலகக் கோப்பைக்கான போட்டியில் போட்டியிடும் இளம் கன்றுகள்.
 போட்டியை போட்டியாகக் கருதி ஒவ்வொரு விளையாட்டையும் விளையாடவேண்டும். எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது'' என்கிறார் ராணி ராம்பால், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் தலைவி.
 - பனுஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com