கல்லூரி முதல்வரான திருநங்கை!

மானபி பந்தோ பாத்யாயா, திருநங்கை ஆவார். மேற்கு வங்கம் கிருஷ்ணகர் மகளிர் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
கல்லூரி முதல்வரான திருநங்கை!

மானபி பந்தோ பாத்யாயா, திருநங்கை ஆவார். மேற்கு வங்கம் கிருஷ்ணகர் மகளிர் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், 1995 -ஆம் ஆண்டில் திருநங்கைகளுக்காக முதன் முதலில் பத்திரிகை தொடங்கினார். 2005-இல் திருநங்கைகளில் முதன்முதலில் பிஎச்டி பட்டம் பெற்றவர். கல்லூரியில் இவரது சிறந்த பணிக்காகவும், இவரின் தகுதிக்காகவும் அக்கல்லூரியின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 6) முதல் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மானபி கூறுகிறார்:
 "நான் எனது குழந்தைப் பருவத்தை நாடியாவில் தான் கழித்தேன். நான் எனது வீட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளேன். ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு எனக்கு கண்ணியமும் பெருமையும் கிடைத்துள்ளது.
 மகிழ்ச்சியாக உள்ளது.
 நான் 2003 மற்றும் 2004-இல் தொடர்ச்சியான சில அறுவை சிகிச்சை மூலம் முழுப் பெண்ணாக மாறினேன். 2004 -ஆம் ஆண்டு சோம்நாத் ஆக இருந்த நான் மானபி ஆக மாறினேன் (மானபி என்றால் பெங்காலி மொழியில் அழகிய பெண் என அர்த்தம் )'' என்றார்.
 - விசாலாட்சி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com