முகப்பரு நீங்கி முகம் பொலிவு பெற!

முகத்தில் பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும். அதற்கு ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொண்டு அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து,
முகப்பரு நீங்கி முகம் பொலிவு பெற!

• முகத்தில் பரு வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம் பொலிவிழந்து காணப்படும். அதற்கு ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொண்டு அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
• இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கி முகம் பளிச்சிடும்.
• பாதாம் பருப்பை ஊறவைத்து பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து விழுது போன்று ஆக்கி, இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி வர முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து முகம் பளிச்சிடும். 
• கடலை மாவு, பாசி பயறு இரண்டையும் அரைத்து வைத்து கொண்டு தினமும் காலையில் குளிக்கப் போகும் முன் ஒரு கைப்பிடி மாவை எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி, அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இது போன்று செய்து வந்தாலே முகத்தில் உள்ள தழும்புகள் மறைந்து முகம் பளபளப்பாவதை உங்களால் உணரமுடியும். 
• நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல இயற்கை க்ளென்சராகும் (CLEANSER). குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின் முகத்தை கழுவி விட . இது ஒரு சிறந்த கிளென்சிங் ஆகும்.
• இளநீரும் ஒரு மிகச்சிறந்த கிளென்சிங் பொருள். எனவே தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவி வர முகம் பளிச்சிடும். 
• சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராமப்புறத்தில் "மங்கு' என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரில் கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த சாந்தை முகத்தில் உள்ள கருப்பு திட்டுகள் மீது தடவுங்கள். வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கருந்திட்டு மறைந்துவிடும்; முகமும் பொலிவு பெறும். 
-எஸ். சரோஜா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com