பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரை!

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்வை திறன் குறைந்த கல்லூரி மாணவி திவ்யா வருகிற ஆகஸ்ட் 5- ஆம் தேதி பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரை பிங்கதான் எனும் மாரத்தான்
பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரை!

மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்வை திறன் குறைந்த கல்லூரி மாணவி திவ்யா வருகிற ஆகஸ்ட் 5- ஆம் தேதி பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரை பிங்கதான் எனும் மாரத்தான் ஓட்டத்தை மேற்கொள்கிறார். 
பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் மற்றும் கலர்ஸ் டிவியும் இணைந்து "கலர்ஸ் பிங்க்தான்' எனும் இந்த மாரத்தானை சென்னைத் தீவுத் திடலில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளனர். 
காரணம், சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில், அதிலும் குறிப்பாக சென்னையில் மார்பக புற்றுநோய் அதிகமாக பரவி வருகிறது. ஏனெனில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இந்திய பெண்களிடம் அறவே இல்லை. 
மார்பகங்களில் உருவாகும் புற்றுநோய் கட்டிகளை சூடுகட்டி, வேர்குரு... என தவறாக கருதுகிறார்கள். இதனால் ஆண்களும், பெண்களும் சரி சமமாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும், வாழ்க்கை முறையும், தட்ப வெப்ப சூழ்நிலையும் பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பதால்... சிறு கட்டியாக இருந்தாலும்... அதை உடனே சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே, மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த பிங்கதான் ஓட்டத்தில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது. 
இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 3கிமீ, 5 கிமீ மற்றும் 10 கிமீ உள்ளிட்ட பிரிவுகளைக் கொண்ட இந்த ஓட்டத்துக்கான ஆன்லைன் பதிவுகளை www.pinkathon.in/chennai வலைதளத்தில் செய்யலாம். 21 கிமீ ஓட்டத்துக்கான பதிவுகளுக்கு ண்ய்ச்ர்ஃல்ண்ய்ந்ஹற்ட்ர்ய்.ண்ய் க்கு மின் அஞ்சல் அனுப்பலாம். யுனைடெட் சிஸ்டர்ஸ் பவுண்டேஷன் ஏற்பாட்டில் மேக்ஸிமஸ் ஆதரவில் நடைபெறும் பெண்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஓட்டமான மாரத்தான் இது. 
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சாதனை படைத்த இந்தியத் தட கள வீராங்கனை அறிமுக விழாவில் 102 வயது மன் கவுர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ பி சுபாஷ் குமார் மற்றும் புற்றுநோய் மருத்துவர் டாக்டர் ரமணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இது குறித்து திவ்யா கூறுகையில்:
""நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவள், எனக்கு பார்வை திறன் குறையுள்ளது. தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு ராணிமேரி கல்லூரியில் சேர்ந்துள்ளேன். எனக்கு ஏற்கெனவே ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. தற்போது, இந்த ஓட்டத்தைப்பற்றி அறிந்ததும் உடனே ஒத்துக்கொண்டேன். பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வரை 150 கி.மீ. ஓட்டம். இதில் கலந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல, அதனால் பிங்கதான் அமைப்பைச் சேர்ந்தவர்கள், எனக்கு நீண்ட தூர ஓட்டத்துக்கான பயிற்சி அளித்து வருகிறார்கள். தற்போது தேசிய விருது பெற்ற ஜூடோ சாம்பியனான மகேஷ்வரி என்ற பார்வை திறன் குறையுடையவரும் என்னுடன் இணைந்துள்ளார். ஆக ஆகஸ்ட் 5 -ஆம் தேதி பாண்டிச்சேரியில் தொடங்கி சென்னை வரை இருவரும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு ஓட்டத்தை மேற்கொள்கிறோம். எங்களுக்குத் துணையாக அனிதா என்கிற பயிற்சியாளர் பயிற்சியளித்து வருகிறார். 
இந்த விழிப்புணர்வு ஓட்டம் சென்னை தீவுத்திடலில் தொடங்கி 5 கி.மீ வரை பயணித்து மீண்டும் தீவுத்திடலிலேயே முடிகிறது. 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியின் கடைசி நாளான ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாங்கள் பாண்டிச்சேரியில் தொடங்கி சென்னையில் முடித்து வைக்கிறோம். 
பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனர் மிலிந்த் சோமன் இதுகுறித்து கூறுகையில் ""சென்னைக்கு ஐந்தாவது முறையாக கலர்ஸ் பிங்கதானைக் கொண்டு வருவதில் குதூகலம் அடைகிறோம். இந்நகரமும், மக்களும், எங்களை ஆதரிப்பார்கள் இந்த ஓட்டத்துக்கு மிகப் பெரிய வெற்றியை வழங்குவார்கள் என்றும் நம்புகிறோம். மாரத்தானை விடவும் பிங்கதான் பிரம்மாண்டமாகும். 21 கிமீ தூர ஓட்டங்களில் 10,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க உள்ளனர். ரன்னிங் கியருடன் ஓடலாம். புடவை, சல்வார் கம்மீஸ், என அவர்களுக்கு வசதியான மற்றும் பிடித்தமான எந்த உடையிலும் பெண்கள் ஓட அனுமதி உண்டு'' என்றார்.
பஜாஜ் எலெக்ட்ரிகல்ஸ் இணை மேலாண் இயக்குநர் அனந்த் பஜாஜ் கூறுகையில், ""பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதையும் தாண்டியது பெண்களுக்கான ஆற்றலை அளிப்பது, சுய நம்பிக்கை கொள்ளும் அளவுக்குப் பெண்களுக்கு மன உறுதியை ஊட்டுவதுடன், சுயமாகச் செயல்பட்டு இன்னும் குறிப்பாகத் தங்களது உடல் ஆரோக்கியத்தையும், நலத்தையும் கவனித்துக் கொள்ளும் சுய கட்டுப்பாட்டையும் வளர்த்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த மாரத்தானின் நோக்கமாகும். இந்த ஓட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com