இது புதுசு!

மும்பையின் இதயப் பகுதியாக விளங்கும் ஆரே வனப்பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கான கார் நிறுத்தம் அமைப்பதற்காக 3,500 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது புதுசு!

மரம் வெட்ட எதிர்ப்பு

மும்பையின் இதயப் பகுதியாக விளங்கும் ஆரே வனப்பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கான கார் நிறுத்தம் அமைப்பதற்காக 3,500 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மேலாளர் அஸ்வினி படேவுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும்படி நடிகையும், சமூக ஆர்வலருமான ஷபானா ஆஷ்மி தன் சுட்டுரைப் பக்கத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாய்ப்பில்லை!

2016-ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக இந்தியா சார்பில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்ற வீராங்கனை தீபா கர்மாகர் (24). காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் நீண்ட காலமாக சிகிச்சைப் பெறுவதால், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லையாம். ஆனால் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அவரது பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் பிரபலம்

"ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் பாடல் மூலம் ஒரே நாளில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியார்(18), கேரள மாநிலம் திரிச்சூரில் குடியேறுவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்தது மும்பையில். 8 வயதிலேயே பரதம், குச்சுப்புடி, மோகினியாட்டம் போன்ற நடனங்களைக் கற்று பல நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். ""அந்தப் பாடலில் நான் கொடுத்த கண்ணசைவு, புருவம் உயர்த்துதல் போன்ற பாவங்கள் எல்லாம் கதகளி, மோகினியாட்டம் நடனங்களில் வருவதுதான். புதிதாக நான் ஏதும் செய்துவிடவில்லை'' என்கிறார் பிரியா.

திரையுலகின் வீனஸ்

1942-ஆம் ஆண்டு வெளியான "பசந்த்' படத்தின் மூலம் தனது 8 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காலஞ்சென்ற நடிகை மதுபாலாவுக்கு இயற்பெயர் மும்தாஜ் பேகம். நடிகை தேவிகா ராணிதான் இவருக்கு மதுபாலா என்று பெயரிட்டார். "ஃபிலிம் இந்தியா' இதழின் ஆசிரியர் பாபுராவ் பட்டேல், இவருக்கு "இந்தியத் திரையுலகின் வீனஸ்' என்று பட்டமளித்தார். 2008-ஆம் ஆண்டு இந்திய தபால் துறை இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கெüரவித்தது.

புயுடன் நடனம்!

பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடித்து வெளியாக உள்ள "பாகி 2' படத்தில் ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃபுடன் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் மிகச்சிறந்த நடனக்காரர்களில் ஒருவரான டைகருடன் நடனமாடியது குறித்து திஷா கூறுகையில்,""நடனத்தில் டைகரின் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவருடன் பணியாற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர் கடின உழைப்பாளி. மிகவும் கடினமாக இருந்தாலும் எப்படியோ நடனக் காட்சிகளில் சமாளித்து ஆடிவிட்டேன்'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com