கோடையைச் சமாளிக்க ...

வெல்லம் குளிர்ச்சியைத் தரும். கோடைக் காலத்தில் செய்யும் இனிப்புகளில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்ப்பது சிறந்தது.
கோடையைச் சமாளிக்க ...

* கோடைக் காலத்தில் பச்சைப்பயறு, துளசி, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சிறிது வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு தினமும் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

* வெல்லம் குளிர்ச்சியைத் தரும். கோடைக் காலத்தில் செய்யும் இனிப்புகளில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்ப்பது சிறந்தது.

* நீர் மோரில் இஞ்சி, பச்சைமிளகாய்க்குப் பதிலாக மிளகு, சீரகப்பொடி, சேர்த்தால் சுவையாகவும் இருக்கும், காரமும் குறைவாக இருக்கும். கோடையில் தாகம் தீர்க்க இது மிகவும் உகந்தது.

* ஐஸ்க்ரீம் சாப்பிட்டவுடன் அரை கப் வெந்நீர் குடித்தால் சளிப் பிடிக்காது.

* தினமும் வெள்ளரிப் பிஞ்சு சாப்பிட்டால் வெயிலில் ஏற்படும் கண்எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும்.

* ரோஜாப்பூ இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

* வெயில் சூட்டினால் வரும் வயிற்றுவலிக்கு கசகசாவை விழுதாக அரைத்து கொதிக்க வைத்த பாலுடன் கலந்து துளி சர்க்கரை கலந்து பருக வேண்டும்.
- நெ.இராமன், சி.ஆர். ஹரிஹரன், ஆர். ஜெயலட்சுமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com