சமையல் டிப்ஸ்... 

அனைத்துவித பொங்கல் செய்யும்போதும் அரிசி, பருப்பை வெறும் வாணலியில் வறுத்துச் செய்தால், விரைவில் கெட்டுப்போகாது.
சமையல் டிப்ஸ்... 

டிப்ஸ் கார்னர்
• இட்லி மாவு அரைத்த கையோடு இட்லி சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கை பொறுக்கும் அளவு சூடுள்ள வெந்நீரினுள் மாவு பாத்திரத்தை வைத்தால் அரைமணி நேர்த்திற்குள் மாவு புளித்து பொங்கி விடும். பின்னர், உடனே இட்லி சுடலாம்.

• அனைத்துவித பொங்கல் செய்யும்போதும் அரிசி, பருப்பை வெறும் வாணலியில் வறுத்துச் செய்தால், விரைவில் கெட்டுப்போகாது.

• பிரியாணி செய்யும் பாத்திரத்தின் அடியில் நெய் தடவிக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெல்லிய வில்லைகளாக சீவி, பாத்திரத்தின் அடியில் அடுக்கி வைத்து, அதன்மேல் அரிசியைப் போடுங்கள். பிரியாணியும் அடிப்பிடிக்காது. உருளைத் துண்டுகளும் சாப்பிட சுவையாக இருக்கும்.

• பாசுமதி அரிசியை வேக வைக்கும் போது இரண்டு, மூன்று சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்தால் அரிசி உடையாமல் முழுசாக இருக்கும்.

• வடக மாவுடன் வடிகட்டிய இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாறு கலந்து விட்டால் சுவையும், மணமும் கூடுவதுடன் எளிதில் ஜீரணமும் ஆகும்.

• அரிசி உப்புமா செய்யும்போது உப்புமா ரவையை லேசாக வாணலியில் வறுத்துவிட்டுச் செய்தால் உப்புமா கூடுதல் சுவையுடன் இருக்கும். ஆறினாலும் இறுகிப்போகாமல் உதிர்உதிராக இருக்கும். 
- எச். சீதாலட்சுமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com