தெரிந்து கொள்வோம்! கறிவேப்பிலையை தூக்கியெறியலாமா?

குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் என நமது சமையல் முறையில் கறிவேப்பிலை இடம்பெறாத உணவே கிடையாது எனலாம்
தெரிந்து கொள்வோம்! கறிவேப்பிலையை தூக்கியெறியலாமா?

குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் என நமது சமையல் முறையில் கறிவேப்பிலை இடம்பெறாத உணவே கிடையாது எனலாம். ஆனால், கறிவேப்பிலை என்பது சமைக்கும்போது பயன்படுத்தப்பட்டு, சாப்பிடும்போது தூக்கியெறிவது என்றுதான் நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். ஆனால், கறிவேப்பிலை மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும் கொண்டது.
கறிவேப்பிலையில் உள்ள சத்துகள்:
இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள் (Glycosides), ஃபிளேவனாய்டுகள் போன்றவை உள்ளன. மேலும், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, மக்னீசியம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியத் தாதுச்சத்துகளும் உள்ளன. கொழுப்புச்சத்து 100 கிராமுக்கே 0.1 கிராம் என்ற அளவில்தான் உள்ளது.

மருத்துவ குணங்கள்:
* ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஜூஸôக மிக்ஸியில் அடித்து, அதனுடன் எலுமிச்சைப்பழச் சாற்றைக் கலந்து குடிக்கலாம் அல்லது அரைத்த கறிவேப்பிலையை மோருடன் கலந்து வெறும் வயிற்றில் பருகலாம். இது செரிமானத்தை அதிகரிப்பதுடன், வயிற்றுக்கோளாறுகளை நீக்கும். அஜீரணம், பசியின்மையையும் போக்கும்.

* கறிவேப்பிலை ஆன்டி-கிளைசிமிக் வகை உணவு என்பதால், ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். இதனால், வாரத்தில் ஒரு நாள் கறிவேப்பிலை சாதம் செய்து உண்டு வர, சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். 

* கறிவேப்பிலையில் லுகேமியா (Leukemia), ப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோய் தடுக்கும் பீனால் என்னும் வேதிப்பொருள் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளன. இதனால் கறிவேப்பிலைப் பொடியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள புற்றுநோயை கட்டுக்குள் வைக்கும்.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும். ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படிவதைக் குறைப்பதால், ரத்தம் ஓட்டம் தங்கு தடையின்றி சீராக இருக்கும்.

* கறிவேப்பிலையை எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து, தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்துவர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி நன்றாக வளரும். கருமையாக வளரும். கறிவேப்பிலைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.

* கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், இது அனீமியா எனப்படும் ரத்தச்சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

* வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் நிறைந்துள்ளதால், கல்லீரல் செல்கள் அழிவைக் கட்டுப்படுத்தி, கல்லீரல் பாதிப்பைக் குறைக்கும். மேலும், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்.

* கண் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கறிவேப்பிலை.

- என். சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com