வாழை இலையில் தயாராகும் சானிடரி நாப்கின்!

மாதா அமிர்தானந்த மயி}ன் பிறந்தநாளை முன்னிட்டு, கொல்லத்தில் அமிர்தபுரி பகுதியில், ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
வாழை இலையில் தயாராகும் சானிடரி நாப்கின்!

மாதா அமிர்தானந்த மயி}ன் பிறந்தநாளை முன்னிட்டு, கொல்லத்தில் அமிர்தபுரி பகுதியில், ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஏராளமான அரங்குகள் இருந்தன. அதில் ஓர் அரங்கில் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த சானிடரி நாப்கின்களை 19 வயது மதிப்புள்ள ஸ்வேதா திரிவேதி என்பவர் விற்றுக் கொண்டிருந்தார். நெருங்கி விசாரித்தோம்:
இவற்றின் சிறப்பம்சம் என்ன?
இந்த சானிடரி பேட்கள் வாழை இலையால் உருவாக்கப்பட்டவை. மீண்டும் பயன்படுத்தத்தக்க வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "சௌக்கியம்' . பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அசௌகர்யத்தைக் குறைக்க இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த சானிடரி நாப்கினை, மீண்டும், மீண்டும் துவைத்து பயன்படுத்த முடியும்.
இது பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு முன் சானிடரி நாப்கின் சார்ந்த புள்ளி விவரங்களை அறிந்து கொள்வோம்:
பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் , சராசரியாக ஒருவர் வாழ்நாள் முழுவதும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை நாப்கின் உபயோகப்படுத்துகின்றனர். இந்தியாவில் தற்போது மாதவிலக்கு ஏற்படும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 360 மில்லியனாக உள்ளது. இவர்கள் மாதத்திற்கு சராசரியாக 12-15 பேட்களை பயன் படுத்துவதாக வைத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சுமார் 432 மில்லியன் பேட்களை, சுற்றுச்சுழல் மாசுபடும் வகையில் தூக்கி எறிகின்றனர். இவற்றின் எடையை கணக்கிட்டால் 900 டன் வரும். இவற்றின் மூலம் 320 கால்பந்து மைதானங்களை நிரப்பி விடமுடியும். உண்மையில் இவை சுற்றுச் சூழலுக்கு பெரும் சீர்கேட்டை, சுகாதாரமின்மையையும் ஏற்படுத்துகிறது.

இனி சானிடரி பேட்கள் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம்:
முதலில் வாழை மரத்திலிருந்து தண்டு எடுக்கப்படுகிறது. அதனை எக்ஸ்டிராக்டர் மெஷினில் விட்டு, ஏராளமான ஸ்டிரிப்புகளாக உருவாக்கிக் கொள்கிறார்கள். அடுத்து பேக்கிங் சோடாவை பயன்படுத்தி அவை நன்றாக சுத்தம் செய்யப்படுகின்றன. பிறகு, சூரிய வெளிச்சத்தில் அவை ஐந்து நாட்கள் காயவைக்கப்படுகின்றன. பிறகு இவை கிராம பெண்களிடம் கொடுக்கப்பட்டு பேட்களாக உருமாற்றம் பெற்று திரும்புகின்றன. இவை அதிகளவு உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டதால் வேலை பார்க்கும் பெண்கள் 8 மணி நேரத்துக்குமேல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
மாறாக தற்போது பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் சானிடரி பேட்களால் சுற்றுச்சூழலுக்கு தீங்குதான் விளைகின்றன. இந்த சானிடரி பேட்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. கடைகளில் துணிகளை வாங்குவது போன்று இதனை வாங்கிச் சென்று பயன்படுத்தலாம். 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தனியாகவும், மொத்தமாகவும் விலைக்கு கிடைக்கின்றன.
ஒரு பெண் வாழ்நாளில், சானிடரி பேட்களை வாங்குவதற்காக குறைந்தபட்சம் 60,000 ரூபாய் செலவு செய்கிறாள் ஆக, மீண்டும் பயன்படுத்த இயலும் சானிடரி பேட்களை வாங்குவதன் மூலம் இந்த செலவை கணிசமாக குறைத்து விடலாம். ஒரு வருடம் இதனைப் பயன்படுத்திய மெக்சிகோவை சார்ந்த கேரளபெண் பத்மா கொன்சாலிஸ் கூறுவது இதுதான்:
"இது நிஜமாகவே சௌகர்யமாய் உள்ளது. முன்பு நான் பயன்படுத்திய சானிடரி பேட்களால் என் உடம்புக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்போது அது தடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார். இந்த மீண்டும் பயன்படுத்தத்தக்க சானிடரி பேட்கள், தற்போது தென்னிந்தியா முழுவதும், சில குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே கிடைக்கின்றன.
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com