கூகுள் டூடில் இந்திய பெண்ணின் படைப்பு! 

ஒவ்வொரு சிறந்த தினத்திற்கும் கூகுள் தன் முன் பக்கத்தில் டூடிலை சமர்பிப்பது வழக்கம்.
கூகுள் டூடில் இந்திய பெண்ணின் படைப்பு! 

ஒவ்வொரு சிறந்த தினத்திற்கும் கூகுள் தன் முன் பக்கத்தில் டூடிலை சமர்பிப்பது வழக்கம். அந்த வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 8- ஆம் தேதி பன்னிரண்டு நாடுகளில் இருந்து பெண் கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் படைத்த படைப்பை வெளியிட்டு கெüரவப்படுத்தியிருந்தது.
 அந்த பன்னிரண்டு பெண்களில் ஒருவர் நம் இந்திய பெண் காவேரி கோபால கிருஷ்ணன். இவர் பெங்களூரை சேர்ந்த ஒரு சுய காமிக்ஸ் தயாரிப்பாளர் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர்.
 அலகாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் படிப்பை முடித்த காவேரிக்கு சிறுவயதில் இருந்தே வரைவதிலும், காமிக்ஸ் தயாரிப்பிலும் அதிக ஈடுபாடு இருந்துள்ளது.
 அவரது டூடில் ஆர்ட் ஓர் சிறுவன் கூரையில் அமர்ந்து புத்தகம் படிப்பது போன்றும் அதன் பின் சிறகு முளைத்து மேலே பறப்பது போன்றும் சித்திரிக்கப் பட்டுள்ளது.
 ஃபர்ஸ்ட் போஸ்ட்டில் அவர் அளித்த பேட்டியில், "என் சிறுவயதில் மாடியில் ஒளிந்து கொண்டு செய்யும் செயல்கள் நினைவுக்கு வந்தது. அந்த நினைவுகளே கைவண்ணமாக வந்தது...'' என குறிப்பிட்டார்.
 "வளர்ச்சி' சார்ந்த டூடிலாக வரைபடம் இருக்க வேண்டும் என கூகுள் அறிவித்த பொழுது தனக்குத் தோன்றியது, புத்தகத்தால் ஒரு சிறு உயிர் வளர்ந்து வலுவான மனிதனாக உருவாவதை, வரைபடம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் காவேரி.
 சம்பக் போன்ற பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி தி ரூம், டிராயிங் தி லைன், ஃபர்ஸ்ட் ஹான்ட் போன்ற பதிப்பகங்களிலும் இவரது காமிக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திரைப்படங்கள் மற்றும் கல்வி புத்தகங்களுக்கும் வரைந்து கொடுத்துள்ளார். பெரும்பாலும் டிஜிட்டலை விட கையில் வரைவதையே விரும்புகிறார் காவேரி.
 மேலும், அவர் கூறுகையில், "ஒரு கலையை கலையாக பார்க்கவேண்டும். அதில் ஆண் பெண் என எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. மேலும் என் வரைபடம் மூலம் மக்களுடன் ஒன்றிப் போகும் செயல்களை கதையாகச் சொல்ல விரும்புகிறேன்'' என தெரிவித்தார் காவேரி.
 - வல்லி கேசவன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com