சாதனைப் பெண்மணிக்கு தொழில்முனைவோர் விருது! 

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெண்கள் பிரிவில் (FICCI-FLO) நிகழாண்டுக்கான தமிழகத்தின் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருதைப் பெற்றுள்ளார்
சாதனைப் பெண்மணிக்கு தொழில்முனைவோர் விருது! 

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெண்கள் பிரிவில் (FICCI-FLO) நிகழாண்டுக்கான தமிழகத்தின் சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருதைப் பெற்றுள்ளார் சுவிஸ் கார்னியர் குழுமத்தின் இயக்குநர் டி. ரத்தினவள்ளி. FICCஐ பெண்கள் அமைப்பின் தேசிய தலைவர் வாஸ்வி பாரத் ராம் இந்த விருதை இவருக்கு வழங்கினார். ரத்தினவள்ளி, Materials Management & Finance - இல் நிபுணர். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் வழியாக தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் (ITCOT), இந்திய தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனம் (EDI) ஆகியவற்றின் தொழில் பயிற்சிகளைப் பெற்றவர். தற்போது Traditional Ayush Cluster of TamilNadu, Swiss Garnier Health Sciences, Swiss Garnier Laboratories, Swiss Garnier Life Sciences ஆகிய நிறுவனங்களின் இயக்குநராக உள்ள டி.ரத்தினவள்ளியை சந்தித்தோம்:
"கடந்த 1999- இல் முதன்முதலாக ரூ. 30 லட்சம் முதலீட்டில் சுவிஸ் கார்னியர் என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தை சென்னையில் தொடங்கினோம். இதையடுத்து அரசின் பல சலுகைகள் காரணமாக கடந்த 2006- இல் ஹிமாச்சல பிரதேசத்தில் Swiss Garnier Life 
Sciences என்ற நிறுவனம் ரூ. 4 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இது ஊழியர்களின் கடினமான உழைப்பு, ஒருங்கிணைப்பு, தரம் போன்றவற்றால் அடுத்த 9 ஆண்டுகளில் ரூ. 180 கோடி வியாபாரம் கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. 
இதைத்தொடர்ந்து இதே பகுதியில் சுவிஸ் கார்னியர் பயோடெக் நிறுவனத்தையும், சிக்கிம்மில் சுவிஸ் கார்னியர் ஜெனக்சியா சயின்சஸ் என்ற நிறுவனத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். தற்போது எங்களது குழுமத்தின் ஆண்டு வருமானம் ரூ. 300 கோடியாக உயர்ந்துள்ளது. 
மருந்து மற்றும் ஆரோக்கியத்துக்கான பொருள்களை தயாரிக்கும் Abbott, Merck, Sun Pharma, Lupin, Wockhardt, Dr. Reddy's, Pepsi போன்ற நிறுவனங்களுக்கு மருந்துகளை தயாரித்து வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக எங்களது சுவிஸ் கார்னியர் குழுமம் உள்ளது. நல்ல தயாரிப்பு நடைமுறைகளைக் கொண்டது என்பதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் சான்றையும் (WHO-GMP), தரத்துக்கான ISO சான்றையும் எங்களது நிறுவனம் பெற்றதே இதற்கு காரணம். 
மேலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஃபிரான்ஸ், யு.கே., நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட 25 நாடுகளில் சிறந்த மருந்து நிறுவனத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். எங்களது மருந்து நிறுவனத்தில், நாளொன்றுக்கு 2.4 கோடி மாத்திரைகள், 1.5 லட்சம் பாட்டில் திரவ மருந்துகள், 4.5 லட்சம் பாக்கெட்டுகள் ட்ரை பெüடர், 4.5 லட்சம் பாக்கெட்டுகள் துணை உணவு, 30 லட்சம் மருந்து உறைகள் (கேப்சூல்ஸ்) தயாரிக்கும் வசதிகள் உள்ளன. 
மருந்து, மாத்திரைகள் அனைத்தும் கைபடாத, முழுவதும் நவீன இயந்திரங்களால் தயாரிக்கப்படுகின்றன. அதோடு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு அமைக்கப்பட்டு திறமையான ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆய்வுப் பணிகளையும் நடத்தி வருகிறோம். தற்போது, எங்களது குழுமத்தில் 1500-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிடைத்துள்ள சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது, மருந்து உற்பத்தி துறையில் தேசிய அளவில் உள்ள 5 நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது போன்ற இந்த சாதனைகள் அனைத்தும், தொழில்துறையில் உள்ள எனது கணவர் கெமிக்கல் இன்ஜினியர் எம்.எஸ். தெய்வேந்திரன், மகன்கள் டாக்டர் டி. விக்னேஷ்காந்தி, பொறியாளரும், முதுநிலை வணிக நிர்வாகியுமான டி. விஷ்ணு, மருமகள் டாக்டர் வி. சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மற்றும் எங்கள் குழும ஊழியர்களின் உழைப்பு மற்றும் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமானது'' என்றார் சாதனையாளர் ரத்தினவள்ளி.
- இரா.மகாதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com