சமையலில் செய்ய கூடாதவை! 

தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. 
சமையலில் செய்ய கூடாதவை! 

* ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது. 

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. 

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. 

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது. 

* சூடாக இருக்கும்போது எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது. 

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. 

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. 

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. 

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. 

* குலாப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. 

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்துமல்லி இலையைப் போடக் கூடாது.
- காஞ்சனா இராசகோபாலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com