சமையல்... சமையல்​!

வெள்ளை பணி​யா​ரம், கல்​கண்டு வடை, கும்​மா​யம், இ​னிப்பு சீயம், ஜவ்​வ​ரிசி ஊத்​தப்​பம், குழி பணி​யா​ரம்

வெள்ளை பணி​யா​ரம்

தே​வை​யா​னவை:
​பச்​ச​ரிசி - ஒரு கிண்​ணம் 
உளுந்து - 4 தேக்​க​ரண்டி
நெய் - 2 தேக்​க​ரண்டி
சர்க்​கரை - ஒரு தேக்​க​ரண்டி
எண்​ணெய் - தேவைக்​கேற்ப
உப்பு - தேவைக்​கேற்ப
​செய்​முறை: ​அ​ரிசி, உளுந்தை சேர்த்து சுத்​தம் செய்து 2 மணி நேரம் ஊற​வி​ட​வும். பிறகு உப்பு, சர்க்​கரை சேர்த்து நைக அரைக்​க​வும் (தோசை மாவு பதத்​தில் இருக்க வேண்​டும்). வாண​லி​யில் எண்​ணெய், நெய் ஊற்றி, காய்ந்​த​தும் வட்ட வடிவ அக​லக் கரண்​டி​யால் மாவை ஊற்​ற​வும். ஒரு​பு​றம் வெந்​த​தும் மறு​பு​றம் திருப்பி போட்டு வேக​வி​ட​வும். இதை ஒவ்​வொன்​றா​கத்​தான் செய்ய வேண்​டும். 
குறிப்பு: மாவு புளிக்​கக் கூடாது. அரைத்த 10 நிமி​டத்​தில் செய்​ய​வும். இதற்கு கார சட்னி சூப்​பர் காம்​பி​னே​ஷன்.

கல்​கண்டு வடை

தே​வை​யா​னவை:
உளுந்து - ஒன்​றரை கிண்​ணம்
பச்​ச​ரிசி - 2 தேக்​க​ரண்டி
கல்​கண்டு - ஒரு கிண்​ணம்
எண்​ணெய் - தேவைக்​கேற்ப
​செய்​முறை: ​பச்​ச​ரிசி, உளுந்தை ஒன்​றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டி​யாக அரைத்​துக் கொள்​ள​வும். முக்​கால் பதம் அரைத்​த​வு​டன் பொடித்து வைத்த கல்​கண்டை சேர்த்​துக் கரைக்​க​வும் உளுந்தை அரைக்​கும்​போது, தண்​ணீர் சிறிது கூட சேர்க்​கக் கூடாது. அரைத்து முடித்​த​தும் மாவு நீர்க்க இருப்​பது போல் தெரிந்​தால், சிறிது அரிசி மாவு சேர்த்​துக் கொள்​ள​வும். வாண​லி​யில் எண்​ணெய்யைச் சூடாக்கி, மாவை வடை​க​ளாக தட்டிப் போட்டு, வேக​விட்டு எடுக்​க​வும் (தீயை மித​மாக எரிய விட வேண்​டும்).

கும்​மா​யம்

தே​வை​யா​னவை:
​வெள்ளை முழு உளுந்து - ஒரு கிண்​ணம்
பச்​ச​ரிசி - ஒரு தேக்​க​ரண்டி
பாசிப்​ப​ருப்பு - கால் கிண்​ணம்
கருப்​பட்டி (அ) வெல்​லம் - ஒன்​றரை கிண்​ணம்
நெய் - கால் கிண்​ணம்
​செய்​முறை: ​உ​ளுந்து, அரிசி, பாசிப்​ப​ருப்பை தனித்​த​னியே வெறும் வாண​லி​யில் சிவக்க வறுக்​க​வும். இவற்றை ஒன்​று​சேர்த்து மாவாக அரைக்​க​வும். கருப்​பட்டி (அ) வெல்​லத்தை கரைத்து வடி​கட்​டிக் கொள்​ள​வும். வடி​கட்​டிய தண்​ணீ​ரில் மாவைக் கொட்டி, கட்டி இல்​லா​மல் கரைத்​துக் கொள்​ள​வும். அடி கன​மான பாத்​தி​ரத்​தில் பாதி நெய் விட்டு, சூடா​ன​தும், கரைத்து வைத்​துள்​ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்​துக் கிள​ற​வும். கைவி​டா​மல் கிள​றிக் கொண்டே மீதி நெய்​யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டா​மல் வரும்​போது இறக்​க​வும்.

இ​னிப்பு சீயம்

​தே​வை​யா​னவை: 
​பச்​ச​ரிசி, உளுந்து - தலா ஒரு கிண்​ணம்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்​ணெய் - தேவைக்​கேற்ப
​பூ​ர​ணம் செய்ய: 
​தேங்​காய் - ஒன்று
பொடித்த வெல்​லம் - ஒன்​றரை கிண்​ணம்
ஏலக்​காய்த்​தூள் - 2 தேக்​க​ரண்டி
நெய் - 3 தேக்​க​ரண்டி
​செய்​முறை: ​தேங்​கா​யைத் துரு​விக் கொள்​ள​வும். வெல்​லத்தை கரைத்து வடி​கட்​ட​வும். வாண​லி​யில் நெய் விட்டு, தேங்​காய் துரு​வல் சேர்த்து ஈரம் போக கிள​ற​வும். அத​னு​டன் கரைத்த வெல்​லம், ஏலக்​காய்த்​தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆற​வி​ட​வும். இது​தான் பூர​ணம்.
பச்​ச​ரிசி, உளுந்தை ஒன்​றாக சேர்த்​துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊற​விட்டு, பின் நைஸôக அரைத்து, உப்பு சேர்த்​துக் கரைத்​துக் கொள்​ள​வும். கிளறி வைத்​துள்ள பூர​ணத்தை சிறு எலு​மிச்சை அளவு உருண்​டை​க​ளாக உருட்​டிக் கொள்​ள​வும். வாண​லி​யில் எண்​ணெய்​யைச் சூடாக்கி, பூர​ணத்தை அரைத்து வைத்​துள்ள மாவில் தோய்த்து, எண்​ணெ​யில் போட்டு பொரித்​தெ​டுத்​தால் சுவை​யான இனிப்பு சீயம் தயார்!

ஜவ்​வ​ரிசி ஊத்​தப்​பம்

தே​வை​யா​னவை:
​இட்லி அரிசி - 4 கிண்​ணம்
உளுந்து - ஒரு கிண்​ணம்
ஜவ்​வ​ரிசி - கால் கிலோ
வெங்​கா​யம் - 2
கடுகு, உளுத்​தம்​ப​ருப்பு - தலா ஒரு தேக்​க​ரண்டி
பச்சை மிள​காய் - 4
எண்​ணெய், உப்பு - தேவைக்​கேற்ப
​செய்​மு​றை:​ அரிசி, உளுந்தை ஒன்​றா​கச் சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்​பது போல் அரைத்து, புளிக்​க​விட்டு உப்பு சேர்க்​க​வும். மறு​நாள் ஜவ்​வ​ரி​சியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்​க​வும். வாண​லி​யில் எண்​ணெய்யைச் சூடாக்கி... கடுகு, உளுத்​தம்​ப​ருப்பு, நறுக்​கிய வெங்​கா​யம், பச்சை மிள​காய் தாளித்து மாவில் சேர்க்​க​வும். தோசைக் கல்​லைச் சூடாக்கி, மாவை கெட்டி​யாக ஊற்றி, எண்​ணெய் விட்டு, இரு​பு​ற​மும் வேக​விட்டு எடுத்து, காரச் சட்னி​யு​டன் பரி​மா​ற​வும்.
குறிப்பு: விருப்​பப்​பட்​டால், கேரட் துரு​வல் சேர்த்​துக் கொள்​ள​லாம்.

குழி பணி​யா​ரம்

தே​வை​யா​னவை:
பச்​ச​ரிசி, புழுங்​க​ல​ரிசி - தலா ஒரு கிண்​ணம்
உளுந்து - அரை கிண்​ணம்
ஜவ்​வ​ரிசி - கால் கிண்​ணம்
வெந்​த​யம் - ஒரு தேக்​க​ரண்டி
வெங்​கா​யம் - ஒன்று
பச்சை மிள​காய் - 3
கடுகு, உளுத்​தம்​ப​ருப்பு - தலா அரை தேக்​க​ரண்டி
தேங்​காய் துரு​வல் - 4 தேக்​க​ரண்டி
கறி​வேப்​பிலை - சிறி​த​ளவு
எண்​ணெய், உப்பு - தேவைக்​கேற்ப
​செய்​முறை: ​பச்​ச​ரிசி மற்​றும் புழுங்​க​ல​ரிசி, உளுந்து, வெந்​த​யம் ஆகி​ய​வற்றை ஒன்​றாக ஊற விட​வும். 2 மணி நேரம் கழித்து நைஸôக அரைக்​க​வும். அரைக்​கும்​போது, 10 நிமி​டம் ஊற வைத்த ஜவ்​வ​ரி​சியை மாவு​டன் சேர்த்து அரைக்​க​வும். உப்பு சேர்த்​துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்​க​விடவும். வெங்​கா​யம், பச்சை மிள​கா​யைப் பொடி​யாக நறுக்​க​வும். வாணலியில் எண்​ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்​தம்​ப​ருப்பு, கறி​வேப்பிலை தாளித்து, வெங்​கா​யம், பச்சை மிள​காய், தேங்​காய் துரு​வல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்​க​வும். குழி பணி​யார சட்டியை சூடாக்கி, சிறிது எண்​ணெய் விட்டு, மாவை குழி​க​ளில் ஊற்றி, இரு​பு​ற​மும் வேக​விட்டு எடுத்​தால் சுவை​யான குழி பணி​யா​ரம் ரெடி.

இ​ந்த வாரம் செட்டி​நாடு சமை​யல் குறிப்​பு​களை வழங்​கு​ப​வர் எம். சுகாரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com