டிப்ஸ்.. டிப்ஸ்..

வெ​து​வெ​துப்​பான நீரில் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, குழந்​தை​க​ளைக் குளிப்​பாட்​டி​னால் குழந்​தை​க​ளின் தோலின் மென்​மையை
டிப்ஸ்.. டிப்ஸ்..

* நீண்ட நேரப்​ப​ய​ணத்​திற்​குப் பின் களைப்பு ஏற்​பட்​டால், அந்​தக் களைப்​பைப் போக்க, உப்பு பெரு​ம​ளவு உத​வு​கி​றது. ஒரு பெரிய பேசி​னில் வெது​வெ​துப்​பான நீர் எடுத்து, அதில் சிறி​த​ளவு உப்பு கலந்து, ஒரு பதி​னைந்து நிமி​டங்​கள் கால்​கள் நனை​யும்​படி உட்கார்ந்​தால், கால்​வலி, களைப்பு எல்​லாம் பறந்​து​போ​கும்.

* வெ​து​வெ​துப்​பான நீரில் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, குழந்​தை​க​ளைக் குளிப்​பாட்​டி​னால் குழந்​தை​க​ளின் தோலின் மென்​மையை ஆலிவ் ஆயில் பரா​ம​ரிக்​கும்.

* தி​ராட்​சைப்​ப​ழம் கிட்னிக்​குப் பாது​காப்பு அளிக்​கும் பழம், மல​மி​ளக்​கி​யா​க​வும் பயன்​ப​டும். இதை, பழ​மா​கவோ, பழ​ர​ச​மா​கவோ உண்​டால், நேரடி பலன் கிடைக்​கும்.

* இ​ரவு மீந்​து​போன சாதத்தை ஹாட்பேக்​கில் வைத்​தி​ருந்து, காலை​யில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் செய்​ய​லாம் அல்​லது. சிறிது நீர்​விட்டு மசித்து, ஸாலட் அல்​லது உரு​ளைக்​கி​ழங்கு மசி​ய​லோடு கலக்​க​லாம்.

• கு​ழந்​தை​யைக் குளிப்​பாட்​டும்​போது, தண்​ணீ​ரில் சிறி​த​ளவு டெட்டா​லை​யும், சிறி​த​ளவு உப்​பை​யும் கலந்து குளிப்​பாட்​டி​னால் குழந்​தை​யின் மென்​மை​யான தோல் மேலும் மென்​மை​யாக ஆவ​து​டன், எந்​த​வித தோல் வியா​தி​க​ளும் வராது. தண்​ணீரை விளா​வி​ய​பின்பு தான் டெட்டா​லை​யும், உப்​பை​யும் சேர்க்க வேண்​டும்.

• தர்​பூ​ச​ணித் தோல், பரங்​கிக்​காய் தோல், பீர்க்​கங்​காய்த் தோல், வெந்த உரு​ளைக்​கி​ழங்கு அல்​லது பச்சை உரு​ளைக்​கி​ழங்கு தோல், சுரைக்​காய் தோல் போன்​ற​வற்​றி​லி​ருந்து, வங்​கா​ளி​கள் வித​வி​த​மான துவை​யல்​கள் செய்​கின்​ற​னர்.

• தி​னந்​தோ​றும் காலை​யில் வெறும் வயிற்​றில், வெது​வெ​துப்​பான நீரில் ஒரு மூடி எலு​மிச்​சை​யைப் பிழிந்து அருந்​தி​னால், நாள் முழு​வ​தும் புத்​து​ணர்ச்​சி​யோடு இருக்​க​லாம்.

• க​ரு​வுற்ற தாய்​மார்​கள் ஆறாம் மாதத்​திற்​குப் பின், அரை லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்​க​ரண்டி பார்லி அரி​சியை மிக்​ஸி​யில் போட்டு பொடி செய்து, கொதிக்​கும் நீரில் போட்டு, கொதிக்​க​வைத்து எடுத்து, ஆறி​ய​பின் ஒரு தேக்​க​ரண்டி எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் சேர்த்து காலை, மாலை அருந்தி வர, நீர் சுருக்கு நீங்கி, கால் வீக்​கம் வடி​யும். மேற்​படி பார்லி நீரை காலை​யி​லேயே தயார் செய்து வைத்​துக் கொண்டு, தேவை​யா​ன​போது, சூடு செய்து, எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் கலக்​க​லாம். எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் கலந்து வைத்​து​விட்​டோ​மா​னால், வெகு சீக்​கி​ரம் புளிப்பு ஏறி, அசி​டிடி உரு​வா​கும்.

• தக்​காளி சூப் தயா​ரிக்​கும்​போது, சிறிது கச​க​சாவை நெய்​யில் வறுத்து, பொடித்​துப்​போட்​டால், சூப் மண​மா​க​வும், மிகுந்த சுவை​யு​ட​னும் இருக்​கும்.

• எள், கச​கசா இரண்​டும் ஒவ்​வொரு தேக்​க​ரண்டி, அரை தேக்​க​ரண்டி ஓமம், கால் தேக்​க​ரண்டி மிளகு ஆகி​ய​வற்றை சிறிது நெய் அல்​லது எண்​ணெய்​யில் மணம் வரும்​வரை வறுத்து, உப்பு சேர்த்து, கர​க​ரப்​பாக பொடித்து, சூடான சாதத்​தில் போட்டு பிசைந்து சாப்​பிட்​டால், புது​வி​த​மான சுவை​யும், மண​மும் கிடைக்​கும். வயிற்​றுப்​புண் ஆறும். கபம் நீங்​கும். வெயி​லில் அலைந்த களைப்​பும் நீங்​கும்.
- சர​சு​வதி பஞ்​சு​
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com