திரைப்படங்களில் நடிப்பதை விட தற்போது பாடுவதிலும், இசையமைப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். விரைவில் நுக்கியா என்ற மேடை பெயரைக் கொண்ட உத்யான் சாகர் என்ற இசையமைப்பாளருடன் இணைந்து எலக்ட்ரானிக் நடன இசை ஆல்பமொன்றை இந்த ஆண்டுக்குள் வெளியிட உள்ளார். ""பாடகியாக மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட ஸ்ருதியுடன் இணைந்து இசை ஆல்பத்தை வெளியிடுவது குறித்து பெருமைப்படுவதாக'' கூறியிருக்கிறார் உத்யான் சாகர்.