இல்லத்தரசியும் தொழில்முனைவோர் ஆகலாம் - 29

சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்மணியை சந்தித்தேன். அவர் என்னிடம் மிகவும் சகஜமாக பேசுவதை கேட்டதும், அவர் நம்மிடம் ஏதேனும் பயிற்சி பெற்றவராக இருப்பார் என நினைத்து பேச ஆரம்பித்தேன்.
இல்லத்தரசியும் தொழில்முனைவோர் ஆகலாம் - 29

சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்மணியை சந்தித்தேன். அவர் என்னிடம் மிகவும் சகஜமாக பேசுவதை கேட்டதும், அவர் நம்மிடம் ஏதேனும் பயிற்சி பெற்றவராக இருப்பார் என நினைத்து பேச ஆரம்பித்தேன். அவர் , ""என்னிடம் எனது பிஸினஸ் நன்றாக போகுது. ரொம்ப நன்றி'' என்றார். 
நான் எதுவும் புரியாமல் விழித்தேன். அவரே தொடர்ந்தார், நீங்கள் சொன்னபடி "கட்லட்' வியாபாரம் செய்கிறேன். இதனால் எனக்கு ஒரளவு வருமானம் கிடைக்கிறது. என் ஓய்வு நேரமும் பயன் உள்ளதாக மாறியுள்ளது'' என்றார். பிறகுதான் ஞாபகம் வந்தது. அவர் சில நாட்களுக்கு முன் என்னிடம் வந்தார். "நான் வீட்டில் இருந்தபடியே ஏதேனும் தொழில் செய்ய வேண்டும். நிறைய பணம் பண்ணனும் என்று இல்லை. குழந்தைகள் உள்ளதால் என்னுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார். 
இதனால் அவரை, எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் வாரா வாரம் மத்திய அரசால் நடத்தப்படும் இலவச ஆறு நாள் கேட்டரிங் பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் பெண்களுடன் அவரையும் அனுப்பி வைத்தேன். (இந்த பயிற்சியை பெறும் பெண்களுக்கு சான்றிதழுடன் ரூ. 18,00 ஊக்க தொகையாக மத்திய அரசே வழங்குகிறது.)
இதையடுத்து அவர் கேட்டரிங் பயிற்சியில் கற்றுக் கொண்ட கட்லட் தயாரிப்பை செய்து பார்த்துள்ளார். நன்றாக வந்திருக்கிறது. மேலும், அவரது வீட்டிற்கு அருகில் தனியாரி பள்ளி ஒன்றும் உள்ளது. 
எனவே, நமது ஆலோசனைப்படியே அவரும் மாலை நேரத்தில் வெஜிடெபிள் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட், பீட்ரூட் கட்லட் என விதவிதமாக தயார் செய்து அதை வெளியே டேபிள் போட்டு, ஸ்டவ் வைத்து தோசைக்கல்லில் சுட்டு விற்பனை செய்துள்ளார். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு அவருக்கு குறைந்தது 2 மணி நேரம்தான் வியாபாரம். நல்ல லாபம் கூட. 
மேலும் இங்கே எங்களால் என்ன விதமான பயிற்சி அளிக்க முடியுமோ அதைத்தான் உங்களுக்கு அதிகமாக சொல்கிறோம். அந்த வகையில், இந்த வாரம் என்ன தொழில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்:
செயற்கை பூக்கள்: நாம் திருமண மேடை அலங்காரம் பார்த்திருப்போம். விதவிதமாக மனதிற்கு பிடித்தாற் போல் அலங்கரித்திருப்பார்கள். அதுபோன்ற ஒரு தொழிலுக்கு முன்னோட்டம்தான் இது. செயற்கை பூக்கள் மொத்த விலை கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வந்து நமக்கு பிடித்தமான வடிவில் மாலையாகவும் செய்யலாம். அதையே விதவிதமாக தோரணங்கள், பூங்கொத்துக்கள் போன்றும் செய்யலாம். இதை உங்கள் பகுதியில் உள்ள பேன்சி கடைகளில் விற்பனை செய்யலாம். வீடு, கடை, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் உபயோகப் படக் கூடியது. 
பூங்கொத்து , பொக்கே தயாரிப்பு: இதே செயற்கை பூக்களை கொண்டு பொக்கே தயார் செய்யலாம். அல்லது அதில் சாகலெட் வைத்து சாக்லெட் பொக்கேவாக தயாரித்து விற்பனை செய்யலாம். நன்கு பழகிய பின், வியாபாரம் நன்கு நடக்கையில் அதையே மாற்றி இயற்கை பூக்கள் கொண்டு தயார் செய்யலாம். நீங்கள் இருக்கும் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக இருந்தால் உங்கள் வீட்டின் முன் டேபிள் வைத்து விற்பனை செய்யலாம். இதையே பூக்கூடை வைத்தும் பொக்கே தயார் செய்யலாம். விதவிதமான பூச்சாடி வாங்கி அதிலே பூக்கள் வைத்தும் விற்பனை செய்யலாம்.
தாய் க்ளே பூக்கள் தயாரிப்பு: தாய் க்ளே பார்ப்பதற்கு வெண்ணெய் போன்று இருக்கும். இதன் விலையும் சற்று அதிகம். இதை முதலில் பாஸ்தா தயாரிக்கும் மிஷினில் ( சாப்பாத்தி மாவு பிசையும் மிஷின் போன்று சிறியதாக இருக்கும். விலையும் குறைவுதான். பாத்திரக் கடைகளில் கிடைக்கும்) போட்டு எடுத்து பின்னர் தேவையான வடிவில், டிசைனில் பூக்கள் செய்யலாம். இந்த தாய் க்ளே பூக்கள் நிஜ பூக்கள் போலவே நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்பதே இதன் சிறப்பு. ஒற்றை பூக்களாக விற்பனை செய்யலாம். சாதாரணமாக கார்ப்பரேட் அலுவலகம், ஸ்டார் ஓட்டல்களில் இயற்கை பூக்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் கூட ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம். மேலும், இயற்கையான பூ அலங்காரம் தேவைப்படுகின்ற விசேஷங்கள், திருமண வரவேற்பு என அனைத்திற்கும் இதை பயன்படுத்தலாம். இதில் பொக்கே செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இது எல்லாமே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய ஆரம்பித்தால்தான் சற்று அனுபவம் கிடைக்கும். இந்த அனுபவத்தைக் கொண்டு சிறிது காலத்திற்கு பின் மேடை அலங்காரம், திருமண நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாள் விழா, 60 -ஆம் கல்யாணம் என அனைத்திற்கும் தேவையான மேடை அலங்காரத்தை பெரிய அளவில் செய்ய முடியும்.
- ஸ்ரீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com