அடர்த்தியான புருவம் வேண்டுமா?

பெண்களுக்கு அடர்த்தியான, வில் போல வளைந்த புருவங்கள் தான்அழகு. கண்கள் அழகாக இருந்து புருவம் சரியாக இல்லையென்றால், அது கண்களின் அழகையும் குறைக்கும்.
அடர்த்தியான புருவம் வேண்டுமா?

பெண்களுக்கு அடர்த்தியான, வில் போல வளைந்த புருவங்கள் தான்அழகு. கண்கள் அழகாக இருந்து புருவம் சரியாக இல்லையென்றால், அது கண்களின் அழகையும் குறைக்கும். அதுமட்டுமில்லாமல், கண்களுக்கு தூசி வராமல் பார்த்துக் கொள்ளும் பாதுகாவலனாகவும் புருவமும் இருக்கிறது. எனவே, புருவங்கள் அடர்த்தியாய் சீராய் வளர என்ன செய்யலாம் பார்ப்போம்:
 விளக்கெண்ணெய்
 விளக்கெண்ணெய் கூந்தல் வளர அருமையான எண்ணெய். அவ்வளவு எளிதில் வளராத புருவத்திலும் மேஜிக் செய்யும் மந்திரம் விளக்கெண்ணெய்க்குதான் உண்டு. தினமும் இரவு தூங்கும் முன் விளக்கெண்ணெய்யை வில்போன்று புருவத்தில் தேயுங்கள். தொடர்ச்சியாய் இரண்டு மாதங்கள் செய்து வர புருவம் அழகாக வளரும்.
 தேங்காய் எண்ணெய்
 தேங்காய் எண்ணெய் மெலிதான சருமத்தில் வேகமாக முடி வளர்ச்சியை தூண்டும் ஆற்றல் கொண்டுள்ளது. அதனை இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்யுங்கள். இன்னொரு முறை: நீர் கலக்காத தேங்காய்ப் பால் எடுத்து அதனை வாணலியில் காய்ச்சுங்கள். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும். பால் சுண்டி, எண்ணெய்ப் பதத்திற்கு வரும். அதனை எடுத்து புருவத்தில் பூசி வர வேகமாய் புருவத்தில் முடி வளரும்.
 பாதாம் எண்ணெய்
 பாதாம் எண்ணெய்யில் விட்டமின் ஈ அதிகம் உள்ளது. அது முடியின் வேர்கால்களை நன்றாக தூண்டும். பாதாம் எண்ணெய்யைக் காலையில் மற்றும் மாலையில் புருவத்தில் பூசி வர, நாளடைவில் அழகான புருவம் கிடைக்கும்.
 வெங்காயச் சாறு
 வெங்காயச் சாறு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சினால் நனைத்து புருவத்தில் தடவுங்கள். தினமும் இரவு இவ்வாறு செய்தால், புருவத்தில் ஏற்படும் சொட்டைகள் கூட மறைந்து சீராக முடி வளரும். அடர்த்தியாகவும் காணப்படும்.
 சோற்றுக் கற்றாழை
 சிலருக்கு தலையில் இருக்கும் பொடுகு உதிர்ந்து புருவத்திற்கு வரும். இதனால் அங்கேயும் தொற்று ஏற்பட்டு, புருவத்தில் முடி உதிர்ந்து, புருவமே இல்லாமல் வெறுமனே காணப்படும். இதற்கு நல்ல தீர்வு சோற்றுக் கற்றாழை ஆகும். சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து, புருவத்தில் பூசுங்கள். அங்கு ஏற்பட்டுள்ள தொற்று நீங்கி, முடி வளர ஆரம்பிக்கும்.
 ஆலிவ் எண்ணெய்
 ஆலிவ் எண்ணெய்யைப் புருவத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். தினமும் இப்படி செய்தால் விரைவில் இதற்கு தீர்வு காணலாம்.
 எலுமிச்சை தோல்
 எலுமிச்சை சாற்றினை உபயோகப்படுத்தியதும், அதன் தோலினை வீசி எறியாதீர்கள். அது புருவ வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் சத்துக்களைக் கொண்டுள்ளது. எலுமிச்சைத் தோலினை தினமும் உங்கள் புருவத்தில் தடவி வாருங்கள். அருமையான பலன் தரும்.
 - பாலாஜிகணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com