பனிக்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை!

பனிக்காலத்தில் கிருமிகள் அதிகமாக உற்பத்தியாவதால் அவற்றிலிருந்து காத்துக்கொள்ள சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பனிக்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை!

• மாலை நேரங்களில், உங்களுக்குப் பிடித்தமான, சூப் சூடாக அருந்தலாம்.
• வெது வெதுப்பான நீரில், இஞ்சிசாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இது தொண்டைக்கட்டு, இருமல் வராமல் தடுக்கும்.
• பனிக்காலங்களில், எல்லாமே சூடாக எடுத்துக் கொள்வது நல்லது.
• சித்தரத்தை, அதிமதுரம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம்.
• எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்து, எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
• வேப்பம்பூவை உணவில், அடிக்கடிசேர்த்துக் கொண்டால் வாயு தொந்தரவுகள், பித்தம், பசியின்மை இவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
• மசாலா பொருட்களை தவிர்ப்பது நல்லது.
• கண்டிப்பாக, உடற்பயிற்சி செய்யவேண்டும். நல்ல தூக்கம் கிடைக்கும்.
• நெஞ்சில் கபம், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமல் இருக்க தலையையும் உடலையும் மூடிக் கொண்டு வெளியில் செல்வது நல்லது.
• பனிக்காலத்தில் கிருமிகள் அதிகமாக உற்பத்தியாவதால் அவற்றிலிருந்து காத்துக்கொள்ள சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
- கிரிஜா ராகவன்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com