இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-26

தற்போது நவராத்திரி நேரம் என்பதால், கொலுவை பார்க்க வரும் விருந்தாளிகளுக்கு அன்பளிப்பு அளிப்பது வழக்கமாகி வருகிறது.
இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-26

தற்போது நவராத்திரி நேரம் என்பதால், கொலுவை பார்க்க வரும் விருந்தாளிகளுக்கு அன்பளிப்பு அளிப்பது வழக்கமாகி வருகிறது. அன்பளிப்பு பொருள்களை கடையில் வாங்கி அளிப்பதைவிட, நாமே செய்து கொடுத்தால் செலவு குறைவதுடன், மனதிற்கு நிறைவாகவும் இருக்கும். கொலு வைக்கும் வழக்கமில்லாதவர்கள், இந்த பரிசு பொருள்களை தயார் செய்து கொலு வைப்பவர்களிடம் விற்பனை செய்யலாம். கடைகளுக்கும் விற்பனை செய்யலாம். இதன்மூலம் கணிசமான வருமானம் கிடைக்கும். அந்த வகையில், இந்த வாரம் தஞ்சாவூர் ஓவியங்கள் தயாரிக்கும் முறையை ஒட்டிய கலைபொருள்கள் தயாரிப்பைப் பார்க்கலாம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
"பொதுவாக தஞ்சாவூர் ஓவியங்கள் தயாரிக்க, சாக்பவுடர், தஞ்சாவூர் ஸ்டோன், கோல்டு ஃபாயில் பேப்பர்கள் போன்றவற்றை உபயோகித்து செய்வர். அதே முறையில், நாம் , பெண்கள் தலையில் அணிந்து கொள்ளும் க்ளிப், நகைப்பெட்டி, குங்கும சிமிழ், போட்டோ பிரேம், பூஜையறையில் வைக்கும் மனைகள், கீ செயின் போன்றவற்றை தயாரிக்கலாம். 
நகைப் பெட்டி: மரத்திலான நகைப் பெட்டிகளை ரெடிமேடாக கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அல்லது கார்பென்டர்களிடம் ஆர்டர் கொடுத்து தேவையான அளவில் வாங்கிக் கொள்ளலாம். பின்னர், பெட்டியின் மேல்புறம் நமது கற்பனைக்கு ஏற்றவாறு டிசைன் செய்து கொடுக்கலாம்.
குங்கும சிமிழ்: சாதாரண குங்கும சிமிழை வாங்கி வந்து, டிசைன் செய்யலாம். பார்க்க மிக அழகாக இருக்கும். பெண்கள் இதனை விரும்பி வாங்கிக் கொள்வர்.
போட்டோ பிரேம்: போட்டோ பிரேம் செய்யத் தெரிந்தால் செய்து கொள்ளலாம். அல்லது கடைகளில் பிளைன் போட்டோ பிரேம்களை ரெடிமேடாக வாங்கி வந்து நமது விருப்பப்படி டிசைன் செய்து கொள்ளலாம். பார்க்க மிக நேரத்தியாகவும் அழகாகவும் இருக்கும். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும்.
பூஜையறை மனை: சாமி சிலைகளை வைக்கும் மனையை வாங்கி வந்து அதில் நமக்கு தேவையான டிசைன் செய்யலாம். பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இந்த தஞ்சாவூர் ஓவியத்தின் அடிப்படையில் செய்யப்படும் கோன் ஒர்க், ஸ்டோன் ஒர்க் போன்ற நுணுக்கங்களை கற்றுக் கொள்ள ஒரு நாள் பயிற்சி பெற்றால் போதுமானது. இதனை சென்னை, அடையாறை சேர்ந்த அனுராதா என்பவர் முழுநேர தொழிலாக செய்து வீட்டிலிருந்தபடியே மாதம் 20,000 வரை சம்பாதிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
தலையில் அணியும் க்ளிப்: இதற்கு ரெடிமேடாக மரத்தில் ஆன பிளைன் க்ளிப் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளவும். சாக்பவுடர், அராபிக் கம், இவற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு மெகந்தி பதத்திற்கு கரைக்கவும். பிறகு, பிளாஸ்டிக் பேப்பரில் கோன் போல் செய்து அதில் சாக்பவுடர் கலைவை இட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, க்ளிப்பிற்கு டிசைன் செய்யலாம். அல்லது இரண்டு ஓரங்களில் பார்டர் மட்டும் கட்டவும். நடுவில் ஏதேனும் பூ டிசைன் செய்து காயவிடவேண்டும். இப்போது கோல்டன் பாயில் ஷீட் அதே அளவில் வெட்டி கம் போட்டு ஒட்டிவிடவும். பிறகு, மல் துணியில் ஒத்தி விடவும். இப்போது தகதகவென டிசைன் கிளிப் ரெடி. விருப்பப்படுபவர்கள் இதில் ஸ்டோன், பெயிண்டிங் செய்து கொள்ளலாம். பார்க்க மிக அழகாக இருக்கும். கணிசமான விலையும் கிடைக்கும். உயர்தரமான பரிசு கொடுத்த பெருமையும் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com