அறிந்தேன் வியந்தேன்!

தினமணி மகளிர்மணியில் 10.10.18 "எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்' என்ற தலைப்பில் வந்த பேட்டியைப் படித்தேன். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின்

தினமணி மகளிர்மணியில் 10.10.18 "எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்' என்ற தலைப்பில் வந்த பேட்டியைப் படித்தேன். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் சிறுவயது நினைவுகளும், தற்கால பொறுப்புகளை பற்றியும் பகிர்ந்து கொண்டவை அருமை. அதிலும், எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள் என்று முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு வழங்கிய அறிவுரை நிச்சயம் அனைத்து பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!
 எஸ். சாந்தி, ஆதம்பாக்கம்.
 இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியல்ல. இவருக்கு முன்பு இந்திராகாந்தியும் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்துள்ளார்.
 அதிலா சிவசு, ஸ்ரீரங்கம்.
 கவிதா பாலாஜி எழுதிய "கொலு யோசனைகள்' என்ற தலைப்பில் துணுக்கு அனைத்தும் பயனுள்ளவை. நன்றி!
 கலைச்செல்வி, சென்னை.
 "எனக்கு நான் அழகிதான்' என்ற கட்டுரையில் தவறான சிகிச்சையினால் விடில்கோ நோயினால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ரம்யாவுக்கு நேர்ந்த கொடுமையும், அவமானங்களையும் அவர் எப்படி வெற்றிபடிகளாக மாற்றிக் கொண்டு நம்பிக்கைத் தரும் பேச்சாளராக மாறியதையும். சமூகம் என்னை வெறுக்கட்டும், விலக்கட்டும், பதிலுக்கு நான் சமூகத்தை நேசிப்பேன் என்ற வார்த்தையில் அவர் உயர்ந்து நிற்கிறார்.
 ஜி. பாலசுந்தரம், திருத்துறைபூண்டி.
 மாலதி சந்திரசேகரன் எழுதிய "பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?' கட்டுரை படித்தேன். மேனியிலிருந்து நறுமணம் வீசுவதற்காக அதிகமாக பெண்களால் பயன்படுத்தப்படும் பாடி ஸ்பிரே, டியோடரண்ட் போன்றவற்றை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தை அறிந்து அதிர்ந்தேன்.
 கார்குழலி, திருச்சி.
 "பெங்களூருவிலிருந்து சிட்னி வரை 120 நாட்களில்... 10 நாடுகள்' கட்டுரையைப் படித்தேன். ஹுப்ளியைச் சேர்ந்த கேன்டிடா லூயிஸ் தன்னுடைய பைக்கில் தன்னந்தனியாக பெங்களூருவிலிருந்து சிட்னி வரை செல்லும் பயணத்தை அறிந்தேன் வியந்தேன்!
 தேவேந்திரன், ராணிப்பேட்டை.
 தினமணி மகளிர்மணி வாசகர் கடிதங்கள்
 அனுப்ப வேண்டிய முகவரி:
 ஆசிரியர்,
 தினமணி மகளிர்மணி
 எக்ஸ்பிரஸ் கார்டன் , 29-2-ஆவது பிரதான சாலை,
 அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை -600 058.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com