ஓவியத்தின் மாடல்!

மைசூர் ஜெகன் மோகன் அரண்மனையில் ஜெயசாம ராஜேந்திரா ஆர்ட் காலரியில் உள்ள "நம்பிக்கையின் ஒளி' என்ற ஓவியம், இந்தியாவில் உள்ள பிரசித்திப் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். திடீரென பார்க்கும்போது
ஓவியத்தின் மாடல்!

மைசூர் ஜெகன் மோகன் அரண்மனையில் ஜெயசாம ராஜேந்திரா ஆர்ட் காலரியில் உள்ள "நம்பிக்கையின் ஒளி' என்ற ஓவியம், இந்தியாவில் உள்ள பிரசித்திப் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். திடீரென பார்க்கும்போது ஒரு பெண் நம் எதிரே விளக்கை ஏந்தி நிற்பது போல் தத்ரூபமாக இருக்கும் இந்த ஓவியம் அந்த ஆர்ட் காலரியில் பிரமிக்க வைக்கும் ஓவியமாக இருந்து வருகிறது. இந்த ஓவியத்தை ராஜா ரவிவர்மா வரைந்ததாக கூட ஒரு தவறான தகவல் உண்டு.
 உண்மையில் இந்த நீர்வண்ண ஓவியம், மகாராஷ்ட்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த ஹல்தான்கர் என்ற ஓவியரின் கைவண்ணமாகும்.
 இதில் மாடலாக இருந்தவர் அவரது மகள் கீதா உப்லேகர் ஆவர். கோலாப்பூரில் நகை வியாபாரி கிருஷ்ணகாந்த உப்லேகரை 1940} ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, இரண்டு மகள், ஒரு மகனுக்கு தாயாகி வாழ்க்கை நடத்திவந்த கீதா உப்லேகர், அண்மையில் அக்}2 ஆம் தேதி தனது 102}ஆவது வயதில் காலமானார்.
 "என்னுடைய 12}ஆவது வயதில் தீபாவளி பண்டிகையின்போது விளக்கு ஒன்றை ஏற்றி கையில் ஏந்திவந்தபோது, என்னை பார்த்த என் தந்தை ஹல்தான்கர், சிறிது நேரம் என்னை அப்படியே நிற்கும்படி கூறி ஸ்கெட்ச் எடுத்தார். மூன்றே நாள்களில் அதை ஓவியமாக வரைந்தார்'' என்று தனது 100}ஆவது பிறந்த நாளன்று கீதா உப்லேகர் கூறியதை, அவரது உறவினர் ராஜா உப்லேகர் அப்போது பத்திரிகையில் தெரிவித்தார். ஜெய சாம ராஜேந்திரா ஆர்ட் காலரி, இந்த ஓவியத்தை ஹல்தான்கரிடமிருந்து 300 ரூபாய்க்கு வாங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தது.
 இதே ஓவியத்தை பிரான்ஸை சேர்ந்த, ஒருவர் 8 கோடி ரூபாய்க்கு விலை பேசினார். ஆனார் ஆர்ட் கேலரி விற்பனை செய்ய மறுத்துவிட்டது.
 - அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com