சமையல்... சமையல்!

சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் நீக்கி  பொடியாக நறுக்க வேண்டும்.  எண்ணெய்யை  வாணலியில் ஊற்றி,   சூடு செய்து  கிழங்கை நன்கு வறுக்கவும்.
சமையல்... சமையல்!


சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்!

தேவையானவை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 250 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
ஓமம் -  2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் -  தேவைக்கேற்ப
செய்முறை:  சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் நீக்கி  பொடியாக நறுக்க வேண்டும்.  எண்ணெய்யை  வாணலியில் ஊற்றி,   சூடு செய்து  கிழங்கை நன்கு வறுக்கவும். சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் விரைவில் நன்கு வறுபடும். பின்னர், சிறிய உரலில் ஓமம்,  மிளகு, உப்பு மூன்றையும் சேர்த்து இடித்துப் பொடிக்கவும். வள்ளிக் கிழங்கு நன்கு கரகரப்பாக  ஆனதும் எடுத்து, அதன்மீது இடித்ததைத் தூவிக் கலந்து பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும்.


கீரை ஊத்தப்பம்

தேவையானவை: 
பச்சரிசி - அரை கிண்ணம்
புழுங்கல் அரிசி -அரை கிண்ணம்
உளுந்தம் பருப்பு - அரை கிண்ணம்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
ஏதாவது 3 வகை கீரை - 1 கிண்ணம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:  அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும்  பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.  பின்னர்   ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துள்ள கீரைகளை பொடியாக நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பங்களாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். ஆரோக்கியமான "கீரை ஊத்தப்பம்' ரெடி.

நெல்லிக்காய்த்  துவையல்!

தேவையானவை:
பெரிய  நெல்லிக்காய் - 10
பச்சை மிளகாய் - 3
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
சீரகம் -  கால் தேக்கரண்டி
உப்பு -  தகுந்த அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:   நெல்லிக்காயைச் சுத்தம்  செய்து கொட்டை  நீக்கி, பல்பல்லாக அரிந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை இரண்டாக  நறுக்கி வைக்கவும். ஒரு சிறிய உரலில் வெந்தயம், சீரகம், சிறிது உப்பு சேர்த்து இடித்த பின்னர், மஞ்சள் தூள், மிளகாய், நெல்லிக்காய் சேர்த்து, கரகரப்பாக இடித்து, எடுக்க வேண்டும்.  அப்படியே பரிமாறலாம். சுவையாக இருக்கும்.

- இல. வள்ளிமயில், திருநகர். 


வேர்க்கடலை வடை


தேவையானவை:
 வறுக்காத வேர்க்கடலை - 1 கிண்ணம்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1
புதினா - சிறிது
கொத்துமல்லித் தழை - சிறிது
செய்முறை: வேர்க்கடலையை  அரை மணி நேரம்  ஊறவைத்து நீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்.  பின்னர், தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.  அரைத்த வேர்க்கடலை விழுதுடன்   பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்துமல்லி சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான "வேர்க்கடலை வடை' தயார்.

 - ஏ.எஸ். கோவிந்தராஜன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com