கற்பனை வளம் மிகுந்த சிக்கன் ஒர்க்!

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்'  என்ற சொல்லுக்கு ஏற்ப கலைநயமும், கற்பனை வளமும்  நிரம்ப அமைந்துள்ள கைவேலைப்பாடான   எம்ப்ராய்டரிங்கில் ஏராளமான வகைகள் உண்டு.
கற்பனை வளம் மிகுந்த சிக்கன் ஒர்க்!

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்'  என்ற சொல்லுக்கு ஏற்ப கலைநயமும், கற்பனை வளமும்  நிரம்ப அமைந்துள்ள கைவேலைப்பாடான   எம்ப்ராய்டரிங்கில் ஏராளமான வகைகள் உண்டு.  அவற்றில் காலத்தினால் அழிக்கமுடியாமல் இன்றும் டிரண்டில் இருக்கும் சில வகைகளும் உண்டு. அந்தவகையில்  சிக்கன் ஒர்க், கட்ச் ஒர்க், மிரர்  ஒர்க் என 50-க்கும் மேற்பட்ட வகைகளை செய்து அசத்துகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ தேவி.  மேலும் இவர், எம்ப்ராய்டரிங் தொழிலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.  இவரைச் சந்தித்தோம்:

""எம்.பில். முடித்துவிட்டு  2007 - ஆம் ஆண்டு வரை  ஓர் அலுவலகத்தில்  வேலை பார்த்தேன். பிறகு  சூழ்நிலைக் காரணமாக  வேலையைத் தொடர முடியாமல் போனது.  அதனால்,  வீட்டில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாக  மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற... சிறுவயதில்  பொழுதுபோக்காக கற்றுக்கொண்ட  எம்ப்ராய்டரிங்கை   செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான், புதுவகையான எம்ப்ராய்டிங் வகையறாக்கள் நிறைய வந்திருப்பதை அறிந்தேன்.  அதனால்  தரமணியில்  உள்ள பாலிடெக்னிக் மூலம்  எம்ப்ராய்டரிங்கில்  புரொஃபஷனல்  கோர்ஸ் முடித்தேன். இதனால்  50-க்கும்  மேற்பட்ட  எம்ப்ராய்டரிங் வகைகளை கற்றுக்கொள்ள முடிந்தது. 

அதில் என்னை மிகவும் கவர்ந்தவை  சிக்கன், கட்ச்  மற்றும்  மிரர் ஒர்க். இதில் சிக்கன் வேலைப்பாடு  என்பது லக்னோவின் பாரம்பரிய எம்ப்ராய்டரிங் கலை. அங்கே  சிக்கன் (இஏஐஓஅச) என்பதற்கு எம்ராய்டரிங் என்று அர்த்தம். இதை ஷேடோ ஒர்க்  என்றும் சொல்கிறோம்.  கட்ச் வேலைப்பாடு  என்பது குஜராத் ஸ்டைல்.  கட்ச் மாவட்டத்தில்  பிரபலமானதால் அந்தப் பெயர். மிரர் ஒர்க் பற்றி பலருக்கும் தெரியும். ஆரம்ப காலத்தில் ஒரிஜனல்  கண்ணாடிகள் வைத்து செய்யப்பட்டது.  பின்னர், துவைப்பதிலும், பராமரிப்பதிலும் சிரமம் ஏற்பட, சமீபகாலமாக செயற்கைக் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகிறது.

விருப்பப்பட்டால் ஒரிஜினல் கண்ணாடித்  துண்டுகளும் பயன்படுத்துகிறோம். இதற்கு எப்போதும் பெண்களிடைய வரவேற்பு உள்ளதால் அனைத்து தரப்பு பெண்களாலும் விரும்பப்படுகிறது. 

சிக்கன் ஒர்க் செய்ய  ஆர்கண்டி  துணி சிறந்தது. கட்ச் மற்றும் மிரர் ஒர்க்கை எந்தத் துணியிலும் செய்யலாம். கழுத்துப் பகுதியை அடைத்ததுபோன்று ஆடம்பரமாகவும் செய்யலாம்.   அல்லது மெல்லிய கோடுகளாக  சிம்பிளாகவும் செய்யலாம். 

சிம்பிளான மிரர்  ஒர்க் எம்ப்ராய்டரிங்கை  ஒரே நாளில்  முடித்துவிடலாம், ஆனால், கட்ச் ஒர்க் மட்டும்  கொஞ்சம் தாமதாகும்,  ஒரு பிளவுஸ் செய்வதற்கே ஒரு வாரம்  வரை தேவைப்படும்.  அதுவே  சிக்கன் ஒர்க் என்றால் நான்கு நாள்களில் முடித்துவிடலாம்.  சல்வார், சேலை என்றால் பல  நாள்கள் தேவைப்படும்.   உழைப்பைப் பொறுத்து லாபம் கிடைக்கிறது.  

கொஞ்சம் கற்பனை வளம் உள்ளவர்கள் இதனை தொழிலாக எடுத்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி புதுப்புது டிசைன்கள் செய்து கொடுத்தால்  நல்ல வரவேற்பு இருக்கும்.  அடிப்படை எம்ப்ராய்டிங் தெரிந்தவர்கள் ஒரே நாள் பயிற்சியின் மூலம்  மூன்று வகையான எம்ப்ராய்டிங்கையும் கற்றுக் கொள்ள முடியும்.  மேலும்,  வீட்டின் அருகில் உள்ள  சிறிய அளவில் துணி வியாபாரம்  செய்பவர்கள், துணிக்கடைகள், பொட்டிக் வைத்திருப்பவர்கள் போன்றோருடன் இணைந்து செய்தால் லாபம் அள்ளும் தொழில் இது'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com