சேவை செய்ய சேர்ந்து நின்றோம்!

ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல்வேறு அமைப்புகளில் இருந்து சாதனை புரிந்து வருகின்றனர் என்பது அறிந்ததுதான்.
சேவை செய்ய சேர்ந்து நின்றோம்!

ஆண்களுக்கு சமமாக பெண்களும் பல்வேறு அமைப்புகளில் இருந்து சாதனை புரிந்து வருகின்றனர் என்பது அறிந்ததுதான். தனியொருவராக இருந்து சாதிப்பதை விட ஒரு குழு அல்லது அமைப்பாக இருந்தால் இன்னும் தேவைப்படுவோருக்கு அதிகமாக உதவலாமே என்று ஐந்து பெண்மணிகளின் எண்ணத்தில் உருவானதுதான் "டச்சஸ் கிளப்'. இதன் 17-ஆவது ஆண்டு விழா வித்தியாசமான முறையில் சமீபத்தில் நடைபெற்றது. இதுகுறித்து அமைப்பாளர்களில் ஒருவரான சுஜாதா முந்த்ரா கூறியதாவது:
"ஏழை எளிய பெண்களுக்கும், சிறு குறு பெண் தொழிலாளர்களுக்கும், முதலாளியாக விரும்பும் பெண்களுக்கும் உதவி செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட, நீனா ரெட்டி (சவேரா ஓட்டலின் நிர்வாக இயக்குநர்) ரதி நீலகண்டன், அனு அகர்வால், அனுராதா சச்தேவ் என நாங்கள் ஐவரும் சேர்ந்து 2002 -ஆம் ஆண்டு "டச்சஸ் கிளப்' (Duchess Club) என்ற அமைப்பை தொடங்கினோம். 
எங்கள் எண்ணம் தெளிவாக இருந்ததால் ஒவ்வொரு மாதமும் நாங்கள் கூடி புதிதாக ஏதாவது தெரிந்து கொள்ள அல்லது மற்றவர்களுடன் இணைந்து செயல்பட இந்த அமைப்பு எங்களுக்கு உதவுகிறது. இதில் சுமார் 300 பெண்மணிகள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். பெண்களை உயர்த்துவதே இந்த அமைப்பின் நோக்கம். இதில் கெüரவ அங்கத்தினர்களாக எழுத்தாளர் சிவசங்கரி, நடிகையும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம், நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம், ஐ.ஏ.எஸ். அதிகாரி கரியாலி, மருத்துவர் பிரீதிகா சாரி ஆகியோர் இருக்கிறார்கள்.
எங்கள் அமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்துகிறது. அவைகளில் சிறப்பானது "டச்சஸ் உத்சவ்' (Dutchess Utsav), டச்செஸ் கார் ரேலி (Dutchess Car Rally), ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று பெண் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கேள்வி -பதில் போட்டி நடத்துகிறோம். கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளின் கிரிக்கெட் போட்டி போன்றவற்றை நடத்தி வருகிறோம். 
அதுபோன்று டச்சஸ் உத்சவ் என்பதில் கலைப்பொருள்களின் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். அதில் கிடைக்கும் வருவாயை எங்கள் அமைப்பினரின் மேம்பாட்டுக்கே செலவு செய்கிறோம். 
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான உத்சவம் கடந்த வாரம் சவேரா ஓட்டலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த உத்சவத்தினை நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார். முதல் நாள் ஒரு fashion show நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். இந்த கண்காட்சியில் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் சுமார் 85 ஸ்டால்கள் அமைத்திருந்தனர். இங்கு விற்கப்படும் பொருட்கள் தரமானவையாகவும், சிறந்தவையாகவும் இருக்க நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதன்படி, இந்த வருடம் ஆர்கானிக் உணவு பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. எங்கள் அமைப்பின் பத்தாவது ஆண்டுவிழாவின் போது "டச்சஸ் உதவும் கரங்கள்' என்ற ஒன்றை தொடங்கினோம். இதன்மூலம் பல்வேறு அடித்தட்டு ஏழை எளிய பெண் குழந்தைகளுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு, அவர்கள் கல்வி கற்பதற்கு உதவி செய்து வருகிறோம். அதில் ஓர் அங்கமாக 12- ஆவது வகுப்பில் படிக்கும் சுமார் 230 மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாலை வேளைகளில் டியூஷன் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இப்படி வறுமையில் இருக்கும் பெண்கள் சுயதொழில் செய்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திட எங்களால் முடிந்த பல உதவிகளை செய்ய முயற்சித்து வருகிறோம். முடிந்தவரை நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்'' என்றார். 
கண்காட்சியில் "நாம்' அமைப்பின் சார்பில் ஸ்டால் அமைத்திருந்த, சுஹாசினி மணிரத்னம் கூறியதாவது: எங்களது "நாம்' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த "மகளிர் உத்சவத்தில்' இணைந்து செயல் பட்டுவருகிறோம். அந்த வகையில் இந்த டச்சஸ் மகளிர் உத்சவத்திலும் கடை எடுத்துள்ளோம். இதில் கிடைக்கும் பணத்தில் ஏழை மாணவ, மாணவிகளின் படிப்பிற்கு செலவு செய்கிறோம். அந்த வகையில், புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக, VIP பெண்மணிகள் பலர் ஓரிருமுறை உபயோகித்து பிறகு ஓரங்கட்டிவிடும் கைப்பை, புடவைகள், போன்றவற்றை அவர்களிடமிருந்து சேகரித்து வந்து ஸ்டாலில் வைத்தோம். இதையறிந்த பல விஐபி பெண்மணிகள் மனமுவந்து தங்களது கைப்பை, புடவைகள் போன்றவற்றை இலவசமாகவே தந்தனர். வயலின் விற்பன்னர் டி.என்.கிருஷ்ணன் மகள் விஜி கிருஷ்ணன் (அவரும் ஒரு வயலின் இசைக் கலைஞர்தான்), எங்கள் அமைப்பிற்கு சுமார் 150 புடவைகளை அளித்துள்ளார்கள். இந்த கண்காட்சியில் சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பல்வேறு பொருட்கள் விற்றுள்ளது. இந்த பணத்தின் மூலம் சுமார் 30 குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பணம் கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com