மித்தாலி, ஜூலன்: புதிய சாதனை!

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 
மித்தாலி, ஜூலன்: புதிய சாதனை!

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 
இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. போட்டியில் இந்தியா, இலங்கையை வீழ்த்தியது.
இந்த போட்டியில் கேப்டன் மித்தாலி ராஜ் பங்கேற்று, மகளிர் கிரிக்கெட்டில் உலகளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்டங்கள் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றார். மித்தாலி கேப்டனாக இலங்கை அணியை எதிர்த்து ஆடியது "118-வது ஒருநாள் போட்டி'யாகும். இதற்கு முன் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் "117 ஒருநாள் போட்டிகளில்' கேப்டனாக ஆடியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது மித்தாலி உடைத்திருக்கிறார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்ற இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி "டெஸ்ட் மேட்சுகள்', "ஒரு நாள் போட்டிகள்', "டி 20' என்று மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 300 விக்கெட்களுக்கு மேல் குவித்து புதிய சாதனை படைத்திருக்கிறார். ஜூலன், டெஸ்ட் போட்டிகளில் 40, ஒருநாள் போட்டிகளில் 205 மற்றும் டி20 போட்டிகளில் 56 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தப் புதிய மைல் கல்லை கடந்துள்ளார். 
இதற்கு முன் ஜூலன் ஒருநாள் போட்டிகளில் எடுத்த 200 விக்கெட்டுகள்தான் சாதனையாகக் கருதப்பட்டு வந்தது. தனது சாதனையை தானே மாற்றியமைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com