அங்கிள் ஆன்டென்னா

நம்  நாட்டில்தான்  பூனையையும் சகுனத்தையும் சம்பந்தப் படுத்தி இப்படி ஒரு  சமுதாயப் பிரச்னை இருக்கின்றது.
அங்கிள் ஆன்டென்னா

கேள்வி: நம் நாட்டில் நாம் வெளியே போகும்போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம் என்கிறோம்.  மற்ற நாடுகளில் எப்படி?
பதில்: நம்  நாட்டில்தான்  பூனையையும் சகுனத்தையும் சம்பந்தப் படுத்தி இப்படி ஒரு  சமுதாயப் பிரச்னை இருக்கின்றது.
அமெரிக்கர்களுக்கு பூனைதான் "நம்பர் ஒன்' செல்லப் பிராணி. அமெரிக்காவில் மட்டும்  செல்லப் பிராணிகளாக  60 லட்சத்துக்கும் மேற்பட்ட பூனைகள் வளர்க்கப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.
ஃபேஷன் ஷோ, நாய் கண்காட்சி போன்று பூனைக் கண்காட்சிகள் அங்கு அடிக்கடி நடக்கின்றன. துறு     துறுப்பாகவும் அழகாகவும் இருக்கும் பூனைகளுக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பில்  பரிசுகள் வழங்கப் படுகின்றன.
எகிப்து நாட்டில், பூனைகள் கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் விலங்குகள் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனால் பூனைகள் அங்கு புனிதமானவைகளாக மதிக்கப்படுகின்றன. எகிப்து நாட்டில், பூனை வழிபாடு நான்காயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கில் இருந்து வருகிறது.
ஐரோப்பியர்களுக்கும் பூனைகளைப் பிடிக்கும். ஆனால் கறுப்புப் பூனை என்றால் மட்டும் அவர்களுக்கு அலர்ஜி! சில குறிப்பிட்ட நேரங்களில்  சாத்தான், கறுப்புப் பூனையாக மாறுகிறது என்பது அவர்களது நம்பிக்கை!

அடுத்த வாரக் கேள்வி: மீன்களில் மனிதர்களுக்கு மிகவும் தேவையான புரதச் சத்து மிக  அதிகமாக உள்ளது என்கிறார்களே, உண்மையா?

பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com