இளமையில் வெல்! முகுந்த் வெங்கடகிருஷ்ணன்

கண்களுக்கு அடுத்தபடியாக மிகமிக முக்கியமான புலனுறுப்பு நமது காதுகள்தாம்! ஏனெனில் பிறவியிலேயே கேட்கும் திறனற்ற குழந்தைகள் பெரும்பாலும் பேசும் திறன் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
இளமையில் வெல்! முகுந்த் வெங்கடகிருஷ்ணன்

கண்களுக்கு அடுத்தபடியாக மிகமிக முக்கியமான புலனுறுப்பு நமது காதுகள்தாம்! ஏனெனில் பிறவியிலேயே கேட்கும் திறனற்ற குழந்தைகள் பெரும்பாலும் பேசும் திறன் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
 முதுமையை நெருங்க நெருங்க நமது காதுகள் சிறிது சிறிதாக கேட்கும் திறனை இழந்து விடுகின்றன. உலகம் முழுவதிலும் 36 மில்லியன் மக்கள் (இளைஞர்கள் மற்றும் முதியோர்) பல்வேறு காரணங்களால் கேட்கும் திறன் இழந்தவர்களாக உள்ளனர். இந்தப் புள்ளி விவரத்தில் குழந்தைகளையும் இணைத்தால் அது 50 மில்லியனையும் தாண்டும்.
 இவர்களில் 70% மக்கள் காது கேட்கும் கருவியை வாங்கும் அளவிற்கு வசதியில்லாதவர்கள் ஆவர். அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் வசித்து வரும் 16 வயதே ஆன முகுந்த் வெங்கடகிருஷ்ணன் தனது கோடை விடுமுறையில் பெங்களூருவிலுள்ள தன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தார். 60% கேட்கும் திறனை இழந்திருந்த அவரிடம் தொடர்பு கொண்டபொழுது அவர் படும் சிரமம் புரிந்தது. காது கேட்கும் கருவி பயன்படுத்திய பொழுதும் அது, "வெறும் இரைச்சலாகத்தான் இருக்கிறது! பேசுவது புரியவில்லை!' என்றார் தாத்தா!
 இந்நிகழ்ச்சி முகுந்தை சிந்திக்க வைத்தது. அமெரிக்காவிற்குத் திரும்பிய அவர் தானே சொந்தமாக ஒரு காது கேட்கும் கருவியை வடிவமைக்கத் தொடங்கினார். அதன்படி இக்கருவி ஏழு வெவ்வேறு விதமான ஒலி அலைகளை உற்பத்தி செய்கிறது. அவை யாவும் வெவ்வேறு அலை நீளங்களை உடையவை. இவற்றில் எந்த ஒலி அலையைக் கேட்க முடிகிறதோ அதுவே இந்தக் கருவியின் நிரந்தரமாக்கப்படுகிறது. இதன் மூலம் கேட்கும் திறனற்ற ஒருவர் தனது காதுகளுக்கு ஏற்ற ஒலி அலையைத் தேர்ந்தெடுத்துத் தெளிவாகக் கேட்க முடியும். மேலும் சுற்றுச் சூழலில் நிலவும் அதிக இரைச்சல் போன்ற சமயங்களில் இக்கருவி தனக்குத்தானே ஒலி அலைகளைக் கூட்டியோ, குறைத்தோ சமன் செய்து கொள்கிறது. இதன் மூலம் இக்கருவியை அடிக்கடிக் கழற்றி மாட்டிக்கொள்ளும் சிரமமும் இல்லை.
 முகுந்த் வடிவமைத்த கருவியின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் அதன் விலை அமெரிக்க சந்தை நிலவரப்படி வெறும் 60 டாலர்கள் மட்டுமே!
 அவர் ஜெஃபர்சன் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில் தனது கருவியை அறிமுகம் செய்தபொழுது அனைவரும் ஏக மனதாக வரவேற்று முதல் பரிசை அவருக்கு அளித்தனர். ஏனெனில் காது கேட்கும் கருவியின் விலை தற்பொழுது அமெரிக்க சந்தையில் 1500 டாலர்கள் ஆகும்!
 இதன் மூலம் சாமானியர்களும், ஏழை எளிய மக்களும் வாங்கிப் பயன்படுத்த முடியும்! இக்கருவியை வடிவமைக்க முகுந்த் வெங்கடகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆனது! தமது பள்ளிப்படிப்பு நேரம் தவிர விடுமுறை நாட்களில் அவர் இக்கருவியை வடிவமைத்துள்ளார்!
 இவரது கருவியை அமெரிக்கத் தொண்டு நிறுவனம் ஒன்று காது கேட்காதவர்களிடம் பரிசோதித்ததில் அது 100% வெற்றி என்று அறிவித்தது! ஒலி இயல் வல்லுனர்களின் உதவியைக் கொண்டே அவர் இக்கருவியை வடிவமைத்துள்ள போதும் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் இக்கருவியை சந்தைப்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன!
 முகுந்த் இக்கருவியின் காப்புரிமைக்கு விண்ணப்பித்து உள்ளார். இக்கருவியானது, 2% முதல் 90% வரை கேட்கும் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!
 இனி கேளாத காதுகள் இருக்"காது'....!!
 
 என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
 கடுவெளி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com