எங்கள் இந்திய நாடு!

எங்கள் சுதந்திர நாடு - புகழ்எங்கும் பரவிய வீடு
எங்கள் இந்திய நாடு!

எங்கள் சுதந்திர நாடு - புகழ்
எங்கும் பரவிய வீடு
தங்கும் இமயத்தின் பீடு - எழில்
தவழும் கலைகளின் மேடு!

முடிவிலா கீர்த்திகள் பாரு - நல்ல 
முன்னேற்றம் ஆர்த்திடும் நாடு!
விடிவிலா துன்பங்கள் ஓட - இன்ப
வெற்றிகள் குவிக்குது தேடி!

புத்தம் புதிய பல சாதனை - கண்டு
புரியுது அறிவியல் சோதனை!
நித்தம் ஞானம் துணிவுடன்  - அன்பு
மேன்மைச் செறிவுகள் பூணுதே!

நற்றொழில் ஓங்கிடும் நாடு - பொது
நலத்தில் திகழ்ந்திடும் வீடு!
பற்றிடும் வெற்றிககள் பாரு - புதுப்
பாரதச் சேவையை நாடு!

எல்லோரும் ஒன்றெனக் கூவி -மன
ஒற்றுமை திகழ்ந்திடும் நாடு!
நல்லோரின் பாரத நாடு -செம்மை 
நாட்டிடக் கூடியே பாடு!

-சு.கந்தசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com