குளிரில் ஓர் ஈர நெஞ்சம்!

அடர்ந்த குளிரில் புதுதில்லிஅதனை ஒட்டிய புறநகரில்
குளிரில் ஓர் ஈர நெஞ்சம்!

கதைப் பாடல்
அடர்ந்த குளிரில் புதுதில்லி
அதனை ஒட்டிய புறநகரில்
படரும் பனியில் ஒலியெழுப்பி 
பண்போடு விதிகள் தமைக் காத்து

வழியில் இருசக்கர வாகனம் ஒன்று -ஓட்டுனர்
விழியில்  மக்களின் நலமேதான்!
சாலையின் இருபுறம் பார்வை செல்ல - பலர்
சால்வை, போர்வை இல்லாமல்

குளிரில் துடிப்பதை அவர் பார்த்தார்!
குமைந்தது நெஞ்சம்...பசி தீர்ந்தும் - கொடுங்
குளிரில் எப்படித் தூக்கம் வரும்? - குறை
நீங்கும் நாளும் என்று வரும்?
கவலையோடு அவர் செல்ல....
கார் ஒன்று எதிரே விரைவாக - வந்து
கண் இமைக்கும் நேரத்தில் மோதியது!
காயம் பட்டது!....குருதியுடன்!

வழக்குப் போட்டார்...."மோதியவர்
வழங்கிட வேண்டும் இழப்பீடு!'
"எத்தனை இலட்சம் கேட்பாரோ' - என
இடித்தவர் எண்ணிய நேரத்தில்

கேட்டார் அவரும் இழப்பீடு - சாலையில்
கேட்பார் இன்றிக் குளிரினிலே - கம்பளிப் 
போர்வை எதுவும் இல்லாமல்
தூக்கம் தொலைப்பார் பல ஏழை!

ஆளுக்கொன்று தந்திடுவீர் - கம்பளியால் 
அவரும் இரவில் தூங்கிடுவார்!
அதனைக் கேட்ட நீதிபதி
அம்மனிதரின் கருணை உள்ளத்தை

எண்ணி எண்ணி மிக வியந்தார்...
எது நேர்ந்தாலும் பண வேட்டை
ஆடும் உலகில் அன்புள்ளம்!
அவரைப்  புகழ்ந்தது அம்மன்றம்!

-பூதலூர் முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com