"சுதந்திரம்' பொன்மொழிகள்!

சுதந்திரமில்லாமல் ஒருவன் சந்தோஷமாகவும் இருக்க முடியாது. யோக்கியனாகவும் இருக்க முடியாது. 
"சுதந்திரம்' பொன்மொழிகள்!

• சுதந்திரமுள்ள இடந்தான் எனது நாடு.  சுதந்திரமில்லாத நாடு காற்றில்லாத வீடு. 
- ஓர் அறிஞர்

• சுதந்திரம் என்றால் என்ன? அது தேவையின் எல்லை.
- யாரோ

• சுதந்திரமே வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை. 
- சுவாமி விவேகானந்தர்

• சுதந்திரமே! உன் சன்னிதானத்தில் நித்ய இன்பம் ஆட்சி புரிகிறது. செழுமை  உன்னைப் பின் பற்றி நடக்கிறது.  உன் முன்னர் வறுமை கூட சந்தோஷம் 
தருவதாய் இருக்கிறது. 
- ஓர் அறிஞர்.

• சுதந்திரமில்லாமல் ஒருவன் சந்தோஷமாகவும் இருக்க முடியாது. யோக்கியனாகவும் இருக்க முடியாது. 
- ஜீனியஸ்

• மனிதன் பயமில்லாமல் வாழவேண்டும். அதற்கு சுதந்திரம் தேவை! 
- வினோபா பாவே

• எவன் ஒருவன் தன் தற்காலிக  நலனுக்காகச் சுதந்திரத்தை விட்டுக்  கொடுக்கிறானோ அவன் ஒரு பொழுதும் சுதந்திரம் பெறத் தகுதியுடையவனல்ல. 
- பிராங்ளின்.
தொகுப்பு: ஆர்.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com