விடுகதைகள்

எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனால், எவரும் என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்க மாட்டார்கள். நான் யார்?
விடுகதைகள்

1.  அறுவடை செய்யச் செய்ய மீண்டும் வளரும் பயிர், என்ன பயிர்?
2.  எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனால், எவரும் என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்க மாட்டார்கள். நான் யார்?
3.  வானில் செல்லும் விமானம் அல்ல; தண்ணீர் உண்டு நதியும் அல்ல... இது என்ன?
4.  இரண்டு பெண்கள் - இரட்டைப் பிறவிகள். ஒருத்தி மேலே போனால், மற்றவள் கீழே போவாள். யார்  இவர்கள்?
5.  வலையை விரிப்பேன் - நான் மீனவன் அல்ல. வலையிலே பிடிப்பேன் - அது மீனும் அல்ல..?
6.  ஓரடி நீளம், ஒருவரைச் சுமக்கும். என்ன இது?
7.  உழவில்லை, நடவில்லை, உணவுக்கு உதவிடும். தண்ணீரில் பிறந்தது, தண்ணீரில் மறைந்திடும். என்ன  இது?
8.  தலையில்லாதவன், தண்ணீர் எடுக்கிறான். யார் இவன்?
9.  செத்தவன் குரல், எத்தனையோ பேருக்குக் கேட்குது...
விடைகள்:
1. தலைமுடி
2. சூரியன்
3. மேகம்
4. தராசுத் தட்டுகள்
5. சிலந்தி, பூச்சி 
6. செருப்பு
7. உப்பு           
8. வாளி
9. முரசு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com