"அடக்கம்'   பொன்மொழிகள்!

அடக்கம் என்பது சுதந்திரத்திற்கு தடையானது அல்ல. சுதந்திரத்தை நேர்வழியில் இயங்கச் செய்யும் கருவியே அடக்கம். 
"அடக்கம்'   பொன்மொழிகள்!

• அடக்கம் என்பது சுதந்திரத்திற்கு தடையானது அல்ல. சுதந்திரத்தை நேர்வழியில் இயங்கச் செய்யும் கருவியே அடக்கம். 
- ரஸ்கின்

• அடக்கம் ஓர் அணிகலன் மட்டுமன்று. அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும். 
- அடிசன்

• மனிதனுடைய துன்பங்களில் பெரும்பான்மையானவை அடக்கம் இல்லாமையால்தான் விளைகின்றன. 
- அகஸ்டின்

• வெற்றி பெற்றபின் அடக்கமாக இருப்பவன் இரண்டாம் முறை வென்றவனாவான். 
- டிஸ்ரேலி

• சட்டம் தடை செய்யாததையும் தன்னடக்கம் தடை செய்து விடுகிறது.
- செனேகா

• உடலை அடக்கி, நாவை அடக்கி, மனதையும் அடக்கியுள்ள ஞானிகளே உண்மையான தன்னடக்கம் உடையவர்கள். 
- புத்தர்

• அச்சத்தை வென்றுவிட்டால் அடக்கம் தானே வரும்.
- மகாவீரர்

• உயர்ந்த இடத்தில் அமரும்போது அடக்கம் மிக அவசியம்.
- சிசரோ

• சிப்பி அடங்கிக் கிடந்தால்அதில் முத்துக்கள் நிறையும்.
- பாரசீகம்

• அடக்கத்தை உறுதியாய்ப் போற்றிக் காக்க வேண்டும். உயிருக்கு ஆக்கம் தரும் அடக்கத்திற்கு மேம்பட்ட செல்வம் இல்லை. 
- திருவள்ளுவர்.
பி.எஸ்.சின்னப்பாண்டியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com